Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சமூகவலைதளங்களில் கவனம் ஈர்க்கும் வடக்கன் பட போஸ்டர்

சமூகவலைதளங்களில் கவனம் ஈர்க்கும் வடக்கன் பட போஸ்டர்

vinoth

, வியாழன், 29 பிப்ரவரி 2024 (13:56 IST)
எழுத்தாளராகவும், திரைப்பட வசனகர்த்தாவாகவும் அறியப்படும் பாஸ்கர் சக்தி முதல் முறையாக ஒரு படத்தை இயக்கியுள்ளார். எம்டன் மகன், அழகர்சாமியின் குதிரை உள்ளிட்ட படங்களுக்கு கதை வசனம் எழுதியவர் பாஸ்கர் சக்தி, பல சின்னத்திரை சீரியல்களிலும் அவர் பணியாற்றியுள்ளார். இந்த படத்தை டிஸ்கவரி சினிமாஸ் மூலமாக புத்தக பதிப்பாளர் வேடியப்பன் தயாரிக்கிறார்.

பாஸ்கர் சக்தி இயக்கத்தில் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள வடக்கன் திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. வட மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் வேலை செய்யும் வட மாநில தொழிலாளர்களைப் பற்றிய படமாக வடக்கன் உருவாகி உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இன்று இந்த படத்தின் முதல் லுக் போஸ்டரை தமிழ் சினிமாவின் பிரபலங்கள் வெளியிட்டனர். இந்த போஸ்டர் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பா ரஞ்சித் தயாரிப்பில் கதாநாயகனாக நடிக்கும் ஜி வி பிரகாஷ்!