Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‘பலூன்’ படக்குழுவினரின் நேர்மையைக் கண்டு வியந்த ரசிகர்கள்

‘பலூன்’ படக்குழுவினரின் நேர்மையைக் கண்டு வியந்த ரசிகர்கள்
, செவ்வாய், 23 ஜனவரி 2018 (10:21 IST)
‘பலூன்’ படக்குழுவினரின் நேர்மையைக் கண்டு வியந்த ரசிகர்கள், பாராட்டி வருகின்றனர்.
ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் நடிப்பில் கடந்த மாதம் 29ஆம் தேதி வெளியான படம் ‘பலூன்’. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சினிஷ் இயக்கியிருந்தார். ஹாரர் படமான இது, கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
 
இந்தப் படத்தின் நேற்றைய போஸ்டரைப் பார்த்து ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர். காரணம், நேற்றோடு இந்தப் படம் ரிலீஸாகி 25 நாட்களாகிறது. அதில், சுமாரான வெற்றி என வெளிப்படையாக குறிப்பிட்டிருந்தனர்.
 
படம் வெளியான அடுத்த நாளே சூப்பர் ஹிட் என விளம்பரம் கொடுக்கும் இந்தக் காலத்தில், சுமாரான வெற்றி என வெளிப்படையாகக் குறிப்பிட்டது ரசிகர்களைக்  கவர்ந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அர்ஜூன் ரெட்டியில் நான் நடித்திருப்பேன்; சியான் விக்ரம்