Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்

சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்
, வெள்ளி, 12 ஜனவரி 2018 (13:40 IST)
சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் ரிலீஸான படம் ‘வேலைக்காரன்’. நயன்தாரா ஹீரோயினாக நடித்த இந்தப் படத்தை, மோகன் ராஜா இயக்கியிருந்தார். இந்தப் படத்தைத் தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் தற்போது நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். ஜோடியாக சமந்தா நடிக்கும் இந்தப் படத்தில், காமெடியனாக சூரி நடிக்கிறார்.
 
இந்தப் படத்தைத் தொடர்ந்து, விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் சிவகார்த்திகேயன். அதன்பிறகு, ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கிறார். விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கியவர் ரவிக்குமார். இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ஒப்புக் கொண்டிருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தானா சேர்ந்த கூட்டம்: திரைவிமர்சனம்