Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகர் ஜெயம் ரவியின் குடும்பத்தில் இருந்து இன்னொரு நடிகர்..!

நடிகர் ஜெயம் ரவியின் குடும்பத்தில் இருந்து இன்னொரு நடிகர்..!
, சனி, 19 ஜனவரி 2019 (15:31 IST)
ஜெயம் ரவி நடிகராகவும், அவருடைய சகோதரர் ஜெயம் ராஜா நடிகர் மற்றும் இயக்குனராகவும், இவர்களின் தந்தை  மோகன் எடிட்டராகவும் திரையுலகில் ஜொலித்து வரும் நிலையில் தற்போது இந்த குடும்பத்தில் இருந்து  இன்னொரு நபர் திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ளார். அவர்தான் ஜெயம் ராஜாவின் மகன் பிரணவ்.



 
தமிழ் சினிமாவில் முன்னனி ஹீரோக்களில் ஒருவரான நடிகர் ஜெயம் ரவி  டிக் டிக் டிக் என்ற படத்தில்  நடித்திருந்தார்.  அந்த படத்தில் ஜெயம் ரவியின் மகன் ஆரவ் அவருக்கு மகனாக அறிமுகமானார். அடுத்து தற்போது மோகன் ராஜாவின் மகன் பிரணவ் ‘தமிழரசன்’  என்ற படத்தில் நடிக்கவுள்ளார். நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பை இளையராஜா தொடங்கி வைத்தார். இந்த படத்திற்கு அவர் இசையமைக்கவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மோகன் ராஜா-ஜெயம் ரவி என தமிழ் சினிமாவில் அண்ணன்- தம்பி வெற்றிக் கூட்டணியை தொடர்ந்து அவர்களின் வாரிசுகளும் அடியெடுத்து வைக்க தொடங்கிவிட்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வைரமுத்து மீது அடுத்தடுத்து புகார் – சினிமா பாடல்களில் தொடரும் கருத்து திருட்டு ?