Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மூடர் கூடம்' நவீனின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

மூடர் கூடம்' நவீனின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு
, புதன், 20 மார்ச் 2019 (21:23 IST)
கடந்த 2013ஆம் ஆண்டு ஓவியா நடித்த 'மூடர் கூடம்' என்ற படத்தை இயக்கிய இயக்குனர் நவீன்,  ஐந்து வருடங்கள் கழித்து ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்கி வந்தார். அவற்றில் ஒன்று 'அக்னி சிறகுகள்', இந்த படத்தில் விஜய் ஆண்டனி, அர்ஜூன், ஷாலினி பாண்டே, பிரகாஷ்ராஜ், நாசர் உள்பட் பலர் நடித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் நவீன் இயக்கி வந்த இன்னொரு படம் 'அலாவுதினின் அற்புத கேமிரா'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகிவிட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் 19ஆம் தேதி ரிலீஸ் ஆகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
நவீன், 'கயல்' ஆனந்தி, 'நந்தகோபால், குபேரன், வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு நடராஜன் சங்கரன் என்பவர் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள அதே ஏப்ரல் 19ஆம் தேதிதான் 'காஞ்சனா 3', 'அயோக்யா' உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்களும் ரிலீஸ் ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்ன ட்ரெஸ் இது? என்ன போஸ் இது? நடிகையை கழுவி ஊற்றும் ரசிகர்கள்