Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விடாமுயற்சி ஷூட்டிங் எப்பதான் முடியும்?… இன்னும் இத்தனை நாள் எடுக்க வேண்டி இருக்கிறதா?

விடாமுயற்சி ஷூட்டிங் எப்பதான் முடியும்?… இன்னும் இத்தனை நாள் எடுக்க வேண்டி இருக்கிறதா?

vinoth

, திங்கள், 11 மார்ச் 2024 (11:27 IST)
அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் ஷுட்டிங் அஸர்பைஜானில் தற்போது நடந்து வருகிறது.  அஜித், திரிஷா உள்ளிட்டவர்கள் ஷூட்டிங்கில் கலந்துகொண்டுள்ளனர். இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தபடத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் சமீபத்தில்தான் ஷூட்டிங் தொடங்கியது.

விடாமுயற்சி படத்தை தயாரித்து வரும் லைகா நிறுவனம் இந்த படத்தின் டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமையை மட்டும் சுமார் 250 கோடிக்கு வியாபாரம் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது படத்தின் பட்ஜெட்டில் சுமார் 70 சதவீதம் அளவுக்கு என சொல்லப்படுகிறது. இதனால் இந்த படம் அஜித் சினிமா வாழ்க்கையில் மிக அதிக தொகைக்கு வியாபாரம் செய்யப்பட்ட படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் எப்போதுதான் முடிந்து ரிலீஸ் ஆகும் என அஜித் ரசிகர்கள் ஆர்வமாகக் காத்திருக்கின்றனர். ஆனால் இன்னும் 70 நாட்களுக்கு மேல் ஷூட்டிங் நடத்த வேண்டியுள்ளதாம். இதற்கிடையில் அஜித் அறுவை சிகிச்சை செய்துகொண்டதால் அவர் சில வாரங்களாவது ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளாராம்.  இதனால் விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நிக்காமப் போயிட்டு இருக்கு… உலகளவில்150 கோடி ரூபாய் வசூல் செய்த மஞ்சும்மள் பாய்ஸ்!