Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் இணையும் படத்தின் ஓடிடி உரிமையையும் கைப்பற்றிய முன்னணி ஓடிடி!

அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் இணையும் படத்தின் ஓடிடி உரிமையையும் கைப்பற்றிய முன்னணி ஓடிடி!

vinoth

, வெள்ளி, 19 ஜனவரி 2024 (12:51 IST)
அஜித் இப்போது தன்னுடைய 62ஆவது படமான விடாமுயற்சி படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தின் ஷுட்டிங் அஸர்பைஜானில் நடந்து வருகிறது.  இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தபடத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் ஷூட்டிங் இப்போதுதான் அஜர்பைஜானில் தொடங்கியுள்ளது.

இதையடுத்து அஜித் நடிக்கும் அடுத்த படத்தை இளம் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த படத்தை தெலுங்கின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் பொங்கல் திருநாளை முன்னிட்டு இந்த படத்தின் பூஜை சென்னையில் எளிமையாக நடந்ததாக ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அஜித்தின் விடாமுயற்சி படத்தின் ஓடிடி உரிமையையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓடிடியில் புதிய சாதனை படைத்த கூச முனிசாமி வீரப்பன் தொடர்!