Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திரையரங்குகள் டிஜிட்டல் பிளாட்பார்ம்களில் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகும் ஆதிபுருஷ் டிரைலர்!

திரையரங்குகள் டிஜிட்டல் பிளாட்பார்ம்களில் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகும் ஆதிபுருஷ் டிரைலர்!
, செவ்வாய், 9 மே 2023 (08:00 IST)
பேன் இந்தியா ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள இதிகாச படம் ஆதிபுருஷ். இதில் பிரபாஸ் ராமனாக நடித்துள்ளார். இந்தி நடிகர் சயிப் அலிகான் ராவணனாக நடித்துள்ளார். இந்த படத்தை தன்ஹாஜி உள்ளிட்ட படங்களை இயக்கிய ஓம் ராவத் இயக்கியுள்ளார். இந்த படம் பேன் இந்தியா படமாக இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்தின் டீசர் நேற்று மாலை வெளியிடப்பட்டது. படம் முழுவதும் மோஷன் கேப்சரிங் முறையை பயன்படுத்தி அனிமேசன் படமாக எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த படத்தின் டீசர் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை அனிமேஷன் படமாக எடுக்காமல் லைவ் ஆக்‌ஷனாக எடுத்திருக்கலாம் என்ற எண்ணத்தை பலர் பதிவு செய்துள்ளனர். இந்த படத்தின் அனிமேஷன் தரம் ஈர்க்கும் வகையில் இல்லை என கூறியுள்ள ரசிகர்கள் சமூக வலைதளங்களில் #DisappointingAdipurish என்ற ஹேஷ்டேகையும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆதிபுருஷ் திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டு, ஜூன் 16 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் இன்று இந்த படத்தின் டிரைலர் திரையரங்குகள் மற்றும் அனைத்து வகையான டிஜிட்டல் பிளாட்பார்ம்களில் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகும் என்ற புதுமையான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குழந்தைக்கு வித்தியாசமான பெயரை சூட்டிய அட்லி- பிரியா தம்பதியினர்!