Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அவுட் கொடுத்ததில் அதிருப்தி.. நடுவருடன் வாக்குவாதம்: சஞ்சு சாம்சனுக்கு அபராதம்!

Sanju Samson

Siva

, புதன், 8 மே 2024 (13:28 IST)
நேற்றைய போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு  அவுட் கொடுத்ததில் அதிருப்தி ஏற்பட்டதை அடுத்து அவர் நடுவருடன் வாக்குவாதம் செய்த நிலையில் அவருக்கு சம்பளத்தில் 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் 222 என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி விளையாடிக் கொண்டிருந்தது.

அப்போது கேப்டன் சஞ்சு சாம்சன் 86 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பவுண்டரி கோட்டிற்கு மிக அருகில் கேட்ச் பிடிக்கப்பட்டது. அது சிக்ஸா அல்லது கேட்சா என்று நடுவர்களால் முடிவெடுக்க முடியாத நிலையில் மூன்றாவது நடுவரை நாட அவர் அவுட் கொடுத்தார்.

வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்த ராஜஸ்தான் அணி 26 பந்துகளில் 60 ரன்கள் எடுக்க வேண்டிய சூழ்நிலையில் அவுட் கொடுக்கப்பட்டதால் சஞ்சு சாம்சன் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனை அடுத்து சஞ்சு சாம்சன் நடத்தை விதியை மீறியதை ஒப்புக்கொண்டதால் அவருக்கு சம்பளத்தில் 30% அபராதம் விதிக்கப்பட்டது.

இது குறித்து ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் சங்கரகரா கூறிய போது எந்த முடிவாக இருந்தாலும் மூன்றாவது நடுவர் தீர்ப்புக்கு கட்டுப்பட வேண்டும் என்றும் நடுவரின் முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Edited by Siva
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிக்ஸ் அடிக்குறதுலாம் எனக்கு ரஸ்க் சாப்புட்றமாதிரி… தோனியின் சாதனையை முறியடித்த சஞ்சு சேட்டன்!