Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தலையைத் தாக்கிய கிரிக்கெட் பந்து – மருத்துவமனையில் அசோக் டிண்டா !

தலையைத் தாக்கிய கிரிக்கெட் பந்து – மருத்துவமனையில் அசோக் டிண்டா !
, செவ்வாய், 12 பிப்ரவரி 2019 (09:58 IST)
இந்தியக் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான அசோக் டிண்டா உள்ளூர் போட்டிகளில் விளையாடும் போது பந்து தாக்கிக் காயமடைந்துள்ளார்.

அசோக் டிண்டா சர்வதேசக் கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் போட்டிகளின் மூலம் இந்திய ரசிகர்களுக்கு அறிமுகமானவர். சமீபகாலமாக மோசமான பார்ம் காரணமாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் போராடி வருகிறார். மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்க உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

அதற்காக நேற்று கொல்கத்தாவில் உள்ள மைதானம் ஒன்றில் நேற்று சகவீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பெங்கால் அணி வீரர் பிரேந்தர் விவேக் சிங் அடித்தார். அந்த பந்தை தடுக்க முயன்ற டிண்டாவின் கைகளைத் தாண்டி அந்தப் பந்து நெற்றியில் தாக்கியது. இதில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தாட்ர். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிடி ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை மருத்துவர்கள் இரண்டு நாட்களுக்கு ஓய்வு எடுக்க சொல்லியுள்ளனர். இப்போது அவர் நன்றாக உள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சில வருடங்களுக்கு முன் கிரிக்கெட் பந்து தாக்கி ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

448 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து: வெற்றி பெறுமா மே.இ.தீவுகள்?