Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒருசில நிமிடங்களில் விற்று தீர்ந்த ஐபிஎல் டிக்கெட் - ரசிகர்கள் அதிருப்தி

ஒருசில நிமிடங்களில் விற்று தீர்ந்த ஐபிஎல் டிக்கெட் - ரசிகர்கள் அதிருப்தி

Mahendran

, திங்கள், 18 மார்ச் 2024 (10:14 IST)
2024 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் மார்ச் 22ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில் முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூர் அணி மோத உள்ளது என்பதும் சென்னையில் நடைபெறும் இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

 மேலும் இந்த முறை ஆன்லைனில் தான் முழுக்க முழுக்க டிக்கெட் விற்பனை செய்யப்படும் என்று கூறியிருந்த நிலையில் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்திருந்தனர் என்பதும் கண்டிப்பாக அனைவருக்கும் டிக்கெட் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று காலை ஒன்பது முப்பது மணிக்கு ஆன்லைன் டிக்கெட் விற்பனை தொடங்கிய நிலையில் ஒரு சில நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டது. இதையடுத்து ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்

இந்த போட்டிக்கான குறைந்தபட்ச டிக்கெட் 1700 ரூபாய் என்றும் அதிகபட்சமாக 7500 என்று நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது என்பதும் ஆன்லைனில் வாங்கினாலும் ஒரு நபர் இரண்டு டிக்கெட்டுகள் மட்டுமே வாங்க முடியும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வன்மத்த கக்கிட்டான்… ஆர் சி பி ஆண்கள் அணியைக் கலாய்த்து பதிவிட்ட ராஜஸ்தான் ராயல்ஸ்!