சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா கொடுக்கலாமா?
, வெள்ளி, 22 நவம்பர் 2013 (17:21 IST)
தலைப்பில் உள்ளதுபோல் கேள்வி கேட்டு கட்டுரை எழுதினால் சச்சின் பக்தர்கள் நம்மை உரித்து எடுத்து விடுவார்கள் என்று தெரியும்! ஆனால் உண்மை, வெறியை விட வித்தியாசமானது. அவரது இந்திய தேச பக்தி, நாட்டுப்பற்று இவையெல்லாம் குறை கூற இடமில்லை என்றாலும், பாரத ரத்னாவுக்கு அவர் எந்த அடிப்படையில் தகுதியற்றவர் என்பதை பார்ப்போம்!
சச்சின் டெண்டுல்கர் இந்தியாவுக்காக கடந்த 24 ஆண்டுகள் விளையாடியுள்ளார். சரிதானே! ஆனால் இது தவறு. டெக்னிக்கலாக அவர் பிசிசிஐ-யிற்குத்தான் விளையாடியுள்ளார். பிசிசிஐ-யைத்தான் பிரதிநிதித்துவம் செய்துள்ளார்.இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமே தன்னை பல முறை தன்னை தனியார் அமைப்பு என்றே அங்கீகரித்துள்ளது. மேலும்
பிசிசிஐ தமிழ்நாடு சொசைட்டீஸ் ரெஜிஸ்ட்ரேஷன் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிசிசிஐ தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் வருவதல்ல. இதனால் அதன் செயல்பாடுகளுக்கு பொதுமக்களிடத்தில் பதில் கூற வேண்டியத் தேவையில்லை.