Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மகா விஷ்ணுக்கு உகந்த துளசியின் பெருமைகள்...!

மகா விஷ்ணுக்கு உகந்த துளசியின் பெருமைகள்...!
புரட்டாசி மாதம் மகாவிஷ்ணுக்கு உகந்த மாதம். இந்த மதத்தில் சனிக்கிழமை பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபடுவதன் மூலம் பல்வேறு பலன்களை  பெறலாம்.
துளசியில், வெண் துளசி, கருந்துளசி என்ற இருவகை பிரசித்தமானவை. இவற்றுள் கருந்துளசியே மிகச்சிறந்ததாக சொல்லப்படுகிறது. அபிஷேக தீர்த்தங்களிலும்,  தெய்வீக மூர்த்திகளுக்கு மாலையாக அணிவிப்பதிலும், பூசைகளின் போதும் அர்ச்சனையாக சமர்ப்பிப்பதிலும், துளசி முக்கியத்துவம் பெறுகிறது.
 
பெருமாளுக்கு மிகவும் பிடித்தது துளசி ஆகும். எனவேதான் பெருமாள் கோவில்களில் பக்தர்களுக்கு பிரசாதமாக துளசி இலைகளையும், துளசி தீர்த்தத்தையும்  கொடுக்கிறார்கள்.
 
பெருமாளுக்கு பூஜை நடத்தப்படும் போது துளசி இலையால் அர்ச்சனை செய்யப்படும். அர்ச்சகர் போடும் துளசி இலை பெருமாளின் திருவடியில் விழும். அந்த  இலையை நாம் பிரசாதமாக வெறும்போது, பெருமாலின் அனுக்கிரகம் நமக்கு கிடைப்பதாக ஐதீகம்.
 
பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்யப்படுவதை வைத்து, அதில் துலசி இலை கலந்து துலசி தீர்த்தம் தயாரிக்கப்படுகிறது. பெருமாள் கோவில்களில் புண்ணிய நதி அல்லது அந்தந்த கோவில் தீர்த்தங்களையும் கலந்து கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு துளசி தீர்த்தம் கொடுக்கிறார்கள். 
 
துளசி தீர்த்தத்தில் பச்சை கற்பூரம், ஏலக்காய் சேர்க்கப்படுவதுண்டு. செம்புப் பாத்திரத்தில் நீர் ஊற்றி அதில் துளசி இலைகளைப் போட்டு ஒரு இரவு வைத்திருந்து அந்த நீரைக் குழந்தைகளுக்கு கொடுத்தால் குழந்தைகளுக்கு சளி தொந்தரவு வராது. 
 
வீட்டில் துளசிச் செடி இருந்தால் இடி, மின்னல் தாக்காது என்பார்கள். ஒவ்வொரு வீட்டிலும் துளசி மாடம் வளர்ப்பது நல்லது.
 
ஹரி பக்தி சுதோயம் என்னும் நூலில் துளசியின் மகிமை பற்றி விரிவாக சொல்லப் பட்டுள்ளது. துளசி இலையின் நுனியில் நான் முகனும், மத்தியில்  திருமாலும், அடியில் சிவனும், மற்றைய பகுதிகளில் பன்னிரண்டு ஆதித்யர்களும், பதினோரு ருத்திரர்களும், எட்டு வசுக்களும், இரு அசுவினி தேவர்களும் எழுந்தருளியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நவராத்திரி விழாவின்போது ஏன் பொம்மைகள் வைக்கப்படுகின்றன...?