Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சுவாமி விவேகானந்தரின் சிந்தனை துளிகள்...!

சுவாமி விவேகானந்தரின் சிந்தனை துளிகள்...!
என் மகனே! மரணம் நேருவதைத் தடுக்க முடியாது. கற்களைப் போலவும், கட்டைகளைப் போலவும் செத்து மடிவதை விட வீரர்களைப் போல இறப்பது மேலானது அல்லவா? அதிலும் மற்றவர்களுக்கு செயவதற்காக அழிந்து போவது மிகவும் நல்லது.
துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.
 
நமது குழந்தை நிலையை எண்ணி இப்போது சிரிப்பது போல, இன்னும், ஐம்பது ஆண்டுகளுக்குப்பிறகு இப்போதைய நிலையை  எண்ணிச் சிரிப்போம்.
 
எதற்காக ஒருவன் கடவுளை நேசிக்க வேண்டும் என்ற கேள்விக்கு பதில் கண்டுபிடித்தாக வேண்டும். இதை  நாம்அறிந்துகொள்ளாத வரையில், எதுவுமே புரிந்து  கொள்ள முடியாது.
 
பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவி சாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது.
 
நூல்களைக் கற்கலாம், சொற்பொழிவுகளைக் கேட்கலாம், பல மணி நேரம் தொடர்ந்து பேசலாம், ஆனாலும் அனுபவமே சிறந்த  ஆசான். அதுவே உண்மையான  கல்வி.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (26-06-2018)!