Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அவர் என்ன தீவிரவாதியா? திருமுருகன் காந்தி ஊபா சட்டத்தின் கீழ் கைது

அவர் என்ன தீவிரவாதியா? திருமுருகன் காந்தி ஊபா சட்டத்தின் கீழ் கைது
, வெள்ளி, 24 ஆகஸ்ட் 2018 (20:56 IST)
பெங்களூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட திருமுருகன் காந்தி மீது காவல்துறையினர் ஊபா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 
மே 17 இயக்கத்தின் ஒருகிணைப்பாளர் திருமுருகன் காந்தி வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பியபோது பெங்களூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
 
கைது செய்யப்பட்ட திருமுருகன் காந்தி மீது பல்வேறு வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருமுருகன் காந்தி மீது சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு வழக்கு பாய்ந்துள்ளது. ஊபா சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 
திருமுகன் காந்தி கைது கண்டனம் தெரிவித்துள்ள இயக்குநர் கௌதமன் கூறியதாவது:-
 
தமிழர் உரிமை, தமிழ் நாட்டு வளங்களை கொள்ளையடிப்பதற்கு எதிராக, போராடுவோர் வரிசையாக ஒடுக்கப்படுகிறார்கள். என்மீது கூட 40 வழக்குகள் பதிவு செய்துள்ளார்கள். அரியலூரில் தங்கியிருந்தபடிதான் கையெழுத்து போட்டு வருகிறேன். 
 
கையில் ஆயுதம் வைத்திருக்கும் தீவிரவாதிக்கு எதிராக போடப்படும் வழக்குதான் UPA. மிக கடுமையான சட்டம் இது. கருத்துரிமை பேசியவருக்கு எதிராக இந்த சட்டத்தை பிரயோகித்துள்ளது ஏன் என்பதை மனசாட்சி உள்ளவர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நிர்மலா சீதாராமன் - செங்கோட்டையன் திடீர் மோதலால் பரபரப்பு