Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இரண்டாவது நாளாக குடிநீர் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம் –பொதுமக்கள் அவதி

இரண்டாவது நாளாக குடிநீர் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம் –பொதுமக்கள் அவதி
, புதன், 17 அக்டோபர் 2018 (11:00 IST)
உயர்நீதிமன்றம் அளித்த வரைமுறையின்றி நிலத்தடி நீரை எடுக்கக்கூடாது என்ற தீர்ப்புக்கு எதிராக டேங்கர் லாரிகள் உரிமையாளர்கள் மற்றும் குடீநீர் கேன் உற்பத்தியாளர்கள் இரண்டாவது நாளாக இன்றும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்றம் அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி வரைமுறையின்றி நிலத்தடி நீர் உறிஞ்சுவதை தடுக்கும் முக்கியமானத் தீர்ப்பை அறிவித்தது. அதில் ‘சட்டவிரோதமாக நிலத்தடிநீரை உறிஞ்சுவதற்கு தடை விதித்தும் வணிக பயன்பாட்டிற்காக நிலத்தடி நீர் எடுப்பதை முறைப்படுத்த வேண்டும்’ என்றும் கூறியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த லாரி உரிமையாளர்கள் முன்பு கால வரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து குடிநீர் கேன் உற்பத்தியாளர்கலளும் நேற்று மாலை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதுகுறித்து குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகி முரளி கூறியுள்ளதாவது ‘உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் 70% நிறுவனங்கள் மூடப்படும் நிலை உருவாகியுள்ளது. குடிநீருக்காக நிலத்தடி நீர் எடுக்க முழு அனுமதி அளிக்க வேண்டும். தோல் பதனிடும் தொழிலுக்காக எடுக்கும் நீரையும் குடிநீருக்காக எடுக்கும் நீரையும் ஒன்றாக பார்ப்பது சரியல்ல. பன்னாட்டு நிறுவனங்கள் 100 ரூபாய்க்கு கேன் விற்பனை செய்து வருகின்றனர். அதனால் இன்னும் 2 நாட்களில் தண்ணீர் விலை 100 ரூபாய்க்கு சென்று விடும். அதை தடுப்பது அரசின் கையில்தான் உள்ளது. அரசின் 142 தடையாணையை நீக்க வேண்டும் அல்லது எங்களுக்கு வேறு சலுகைகள் ஏதேனும் அளிக்க வேண்டும் எனக் கூறியுள்ளர்.

தமிழகத்தின் பெரும்பகுதி மக்கள் கேன் தண்ணீரையே குடிநீராகப் பயன்படுத்துவதால், இந்த வேலை நிறுத்தம் குடிநீர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இதனால் அரசு விரைந்து இதுகுறித்த நடவடிக்கை ஒன்றை எடுக்க வேண்டும் என ஆவலாக உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆந்திர போலீஸை மரத்தில் கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த மக்கள்