Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கருவுற்றதும் 3 மாதத்தில் குழந்தை பிறக்குமா? அப்படித்தான் எய்ம்ஸும்: தமிழிசை அடடே விளக்கம்

கருவுற்றதும் 3 மாதத்தில் குழந்தை பிறக்குமா? அப்படித்தான் எய்ம்ஸும்: தமிழிசை அடடே விளக்கம்
, திங்கள், 1 அக்டோபர் 2018 (20:16 IST)
மதுரையில் எம்ய்ஸ் மருத்துவமனை அமைக்கப்படவுள்ளதாக கூறப்பட்டு வருகிறதே தவிற அதற்காக எந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவில்லை. 
 
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம் எய்ம்ஸ் மருத்துவமனை இன்னும் அமைக்கப்படாததை குறித்து கேட்ட போது, அதற்கு அவர் பின்வருமாறு பதில் அளித்துள்ளார். அவர் கூறியது பின்வருமாறு...
 
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை ரூ.1500 கோடியில் அமையும் மிகப்பெரிய திட்டம். அது உடனடியாக அமையாதது ஏன் என கேட்பது கருவுற்ற 3 மாதத்தில் குழந்தை பிறக்காதது ஏன் என்பது போல உள்ளது. 
 
மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மாதிரி மருத்துவமனைக்கன பணிகளில் மத்திய, மாநில அரசுகள் முழுவீச்சில் செயலாற்றி வருகின்றன. 
 
சுமார் 1500 கோடி ரூபாய்க்கான மிகப்பெரிய திட்டம் என்பதால் இவை அனைத்தும் அரசு முறைப்படி வடிவமைக்கப்படும். ஆவணங்கள் முறையாக தயார் செய்து மத்திய, மாநில அரசுகள் சுமூகமாக செயலாற்றி வருகிறார்கள். 
 
கருவுற்ற பின்பு குழந்தை பிறக்க 10 மாதம் இயல்பான கால அவகாசம் தேவை அதுபோலத்தான் இதுவும். ஆனால் கருவுற்ற பின் 3 மாதத்திலேயே குழந்தை ஏன் பிறக்கவில்லை என்று கேள்வி எழுப்புவது எப்படி சாத்தியமில்லையோ அதுபோலத்தான் நிதி ஒதுக்கவில்லை என்பதும் என பலே விளக்கம் அளித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுக வேட்பாளராக திருப்பரங்குன்றத்தில் களம் காணும் எச்.ராஜா?