Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகம் ஆயுதக் கிடங்காக மட்டுமல்ல போதை கிடங்காக மாறி சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது-முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்!

தமிழகம் ஆயுதக் கிடங்காக மட்டுமல்ல போதை கிடங்காக மாறி சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது-முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்!

J.Durai

மதுரை , வெள்ளி, 26 ஏப்ரல் 2024 (15:29 IST)
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், மதுரை மேற்கு (தெற்கு) ஒன்றியத்தின் சார்பில் குமாரத்தில் நீர் போர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
 
இதற்கு ஒன்றிய கழக செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
 
முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தொடங்கி வைத்தார்.
 
அப்போது ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது...
 
பொதுச் செயலாளர் எடப்பாடியார் தமிழக முழுவதும் மக்களின் தாகம் தணிக்கும் வகையில் நீர் மோர் பந்தலை திறந்து மக்களுக்கு சேவை செய்ய உத்தரவிட்டு உள்ளார்.
 
அவர் அறிவித்த 24 மணி நேரத்தில் சோழவந்தான் தொகுதியில் உள்ள குமாரம், அலங்காநல்லூர், சோழவந்தான், வாடிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் மக்களை தாகம் தணிக்க வகையில் நீர் மோர் இளநீர் சர்பத் உள்ளிட்ட நீர் மோர் பந்தலை திறக்கப்பட்டுள்ளது.
 
ஏற்கனவே எடப்பாடியார் நீர் மோர் பந்தலை திறக்க தேர்தல் ஆணையத்தில் அனுமதி பெற்றுள்ளார் மாவட்ட கழகம் சார்பில் தினந்தோறும் இந்த நீர்மோர் பந்தலை கண்காணிக்கப்பட்டு வரும்.
 
தற்போது தமிழகம் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது அதற்கு பல உதாரணம் சொல்லலாம், புரட்சித்தலைவி அம்மா மக்களுக்கு 20 கிலோ விலையில்லா அரிசி திட்டத்தை தொடங்கி வைத்தார், தற்போது இந்த திட்டத்தில் முறைகேடு நடைபெற்று வருகிறது.
 
கோவில்பட்டியில் திமுகவை சேர்ந்தவர் 3.50 லட்சம்டன் அரிசியை கடத்தி உள்ளார் இதை தட்டிக் கேட்ட வழக்கறிஞரை பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர்.
 
அதேபோல் சித்திரை திருவிழாவில் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில் 7000 போலீசார் காவல் பணியில் இருந்தனர் ஆனால் அப்படி இருந்தும் சட்ட ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளது.
 
சித்திரை திருவிழாவில் ராமராயர் மண்டபத்தின் அருகே பட்டாக்கத்தியுடன் ரவுடிகள் மோதி ஒரு இளைஞரை கொலை கொலை செய்தனர் இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர் .
 
அதேபோல் மதுரையில் வேலை முடித்துக் கொண்டு இல்லம் திரும்பிய ஒருவரை மது, கஞ்சா அருந்தியவர்கள் அவரை தாக்கியுள்ளார்.
 
தமிழகத்திற்கு தலைகுனிவு ஏற்படுத்தும் வகையில், ஜாபர் சாதிக் 20 ஆயிரம் கோடி அளவில் கஞ்சா கடத்தியுள்ளார் தற்பொழுது, சென்னை விமான நிலையத்தில் 50 கோடி அளவில் போதை பொருள் கைப்பற்றி தலைப்புச் செய்தியாக வந்துள்ளது.
 
எங்கு பார்த்தாலும் பெட்ரோல் குண்டு சம்பவம் நடைபெற்று ஆயுதக்கிடங்காக தமிழகம் மாறியது மட்டுமல்ல, தற்போது போதை பொருள் கிடங்காக மாறிவருவதால்  மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
 
இன்றைக்கு இளைஞர்களுக்கு எப்படி காப்பாற்ற போகிறோம் என்று கவலை ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை, தமிழகத்தின் சட்ட ஒழுங்கு குறித்து தொடர்ந்து சட்டமன்றத்திலும், தேர்தல் பிரச்சாரத்திலும் எடப்பாடியார் எடுத்துரைத்து வருகிறார்  அவர் எடுக்கின்ற தியாக வேள்விக்கு மக்கள் அனைவரும் கரம் கொடுக்க வேண்டும்.
 
பிரதமர் பரப்புரையில் மதரீதியாக பிரித்துப் பார்த்து பேசகூடாது, சட்டம் அனைவருக்கும் சமம் உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் சட்டத்தைப் பிரித்து அழகல்ல, இது போன்று நாடு சந்தித்தது இல்லை தற்போது மரபை மீறி உள்ளார்களா? என்று அச்சம் இன்றைக்கு ஏற்பட்டுள்ளது இதுகுறித்து எடப்பாடியார் விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 
அண்ணாமலை ஓட்டுகள் நீக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார் தமிழகம் முழுதும் 68,300 வாக்குச்சாவடிக்கு உள்ளது இதில் அதிமுகவிற்கு அனைத்து இடங்களில் வாக்குச்சாவடி முகவர்கள் உள்ளனர்.
 
பிஜேபிக்கு வாக்குச்சாவடி முகவர்கள் இருந்தால் முன்கூட்டியே தெரிவித்து இருப்பார்கள். 
 
இதன் மூலம் கட்டமைப்பு இல்லை என்று தெரிகிறது. தற்போது தேர்தல் தோல்வி காரணமாக ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள் ஆனாலும தேர்தல் ஆணையம் இது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
கடந்த 15 ஆண்டுகளாக  தேனி மக்களை புறக்கணித்த டிடிவி தினகரனை இந்த தேர்தலில் மக்கள் புறக்கணிப்பார்கள், இந்த தேர்தல் உடன் காணாமல் போய்விடுவார். தமிழ்நாட்டுக்கு தலைவர் என்று சொன்ன ஒருவர் இன்றைக்கு ஒரு தொகுதியில் தலைவராய் உள்ளார் தேர்தலுக்கு பின்பு அவரும் காணாமல் போய்விடுவார் என கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண் அதிகாரிகளுக்கு எதிரான திமுகவினரின் தொடர் அராஜகம்: அண்ணாமலை கண்டனம்..!