Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சின்மயியை வைரமுத்து ஏன் திட்டினார்? - உதவியாளர் விளக்கம்

சின்மயியை வைரமுத்து ஏன் திட்டினார்? - உதவியாளர் விளக்கம்
, திங்கள், 22 அக்டோபர் 2018 (11:25 IST)
பாடகி சின்மயியை கவிஞர் வைரமுத்து திட்டியதன் பின்னணி தெரியவந்துள்ளது.

 
வைரமுத்து மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்திய சின்மயி, சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் “வைரமுத்து எழுதிய கவிதை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு என்னை தமிழ்த்தாய் வாழ்த்து பாடுமாறு அழைத்தார். ஆனால் நான் மறுத்துவிட்டேன். இதனால், அரசியல்வாதியை பற்றி தவறாக பேசினார் என கூறிவிடுவேன் என வைரமுத்து மிரட்டினார்” என சின்மயி கூறியிருந்தார். 
 
இதுகுறித்து விளக்கமளித்துள்ள வைரமுத்துவின் உதவியாளர் பாஸ்கர் “சின்மயி கூறியிருப்பது சுத்தப் பொய். 2012ம் ஆண்டு, உயர் நீதிமன்றத்தின் 150வது ஆண்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்காக வைரமுத்து ஒரு பாடல் எழுதிக்கொடுத்தார். அதை பாடுவதாக சின்மயி ஒப்புக்கொண்டார். ஆனால், அதிகம் சம்பளம் கொடுத்ததால் தனது தாய் வேறு நிகழ்ச்சிக்கு ஒப்புக்கொண்டுவிட்டதாக கூறினார்.
 
இதுதான் வைரமுத்துவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. குறுகிய நேரத்தில் வேறொரு பாடகியை தேர்வு செய்து, பயிற்சி கொடுத்து பாட வைப்பது சிரமம். அதன்பின் பாடகி ஹரிணியை வைரமுத்து பாட வைத்தார். 
 
சின்மயியின் இந்த நடவடிக்கை பிடிக்காமல், வாக்கு சுத்தம் வேண்டும் என சின்மயியை திட்டினார். முதல்வர் கலந்து கொள்ளும் விழாவில் இப்படி செய்யலாமா? என அவர் கூறியதையே, அரசியல்வாதி பெயரை சொல்லி மிரட்டியதாக சின்மயி மாற்றி பேசியுள்ளார் என பாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.
 
மேலும், இந்த நிகழ்ச்சிக்கு பின் சின்மயியை வைரமுத்து எந்த நிகழ்ச்சியிலும் பாட வைக்கமால் ஒதுக்கியே வைத்திருந்தார் எனவும் பாஸ்கர் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோபத்தில் பேசிவிட்டேன்: ஹெச்.ராஜா பகிரங்க மன்னிப்பு