Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐயா நீதி எசமானே: போக்குவரத்து சங்கத்தின் சாட்டையடி கேள்வி!

ஐயா நீதி எசமானே: போக்குவரத்து சங்கத்தின் சாட்டையடி கேள்வி!
, சனி, 6 ஜனவரி 2018 (12:31 IST)
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழக போக்குவரத்து ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் நீதிபதிகளை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளனர்.
 
புதிய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததால், கடந்த 4-ஆம் தேதி மாலை முதல் தமிழக போக்குவரத்து ஊழியர்கள் தமிழகம் முழுவதும் பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், 90 சதவீத பேருந்துகள் இயக்கப்படவில்லை.
 
இதனால் பொதுமக்கள், மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருவதால் போராட்டத்தை கைவிட்டு பணியாளர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும், இல்லையேல் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
webdunia
 
ஆனால் அதை ஏற்க மறுத்த போக்குவரத்து ஊழியர் சங்க நிர்வாகிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வரும் திங்கட்கிழமை அவர்கள் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர். இந்நிலையில் திருநெல்வேலி சிஐடியூ சங்கத்தினரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த முறை போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டபோது அவர்கள் வேலை நிறுத்தத்தை உடனடியாக கைவிடவில்லையென்றால் எஸ்மா சட்டத்தை பயன்படுத்த அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதே போல இந்த முறையும் வேலை நிறுத்தத்தை கைவிட சொல்லியுள்ள நீதிமன்றம், இல்லையென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்க அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
 
இந்நிலையில் அரசு போக்குவரத்து சிஐடியூ திருநெல்வேலி சங்கத்தின் அறிவிப்பு பலகையில் நீதிபதிகளை நோக்கி கேள்வி கேட்டு எழுதியுள்ளனர். அதில், நீதிபதிகளின் சம்பள உயர்வு,
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரூ.100000 - 280000, உச்ச நீதிமன்ற நீதிபதி ரூ.90000 - 250000, உயர் நீதிமன்ற நீதிபதி ரூ.80000 - 225000, மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஐயா நீதி எசமானே எங்க நியாயமான சம்பளத்தையும், ஓய்வுகால 5 ஆண்டு பாக்கியையும் கேட்டா தப்பா? என எழுதியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கர்நாடகாவிலும் சிக்கலை ஏற்படுத்திய ரஜினி அறிவிப்பு