ரஜினி, கமலுக்கு சவால் விடுத்த 'கள்' இறக்கும் சங்கத்தலைவர்

புதன், 14 பிப்ரவரி 2018 (18:11 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் அரசியலுக்கு வரவுள்ள நிலையில் அவர்கள் இருவருக்கும் தமிழக 'கள்' இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி என்பவர் ஒரு சவாலை விடுத்துள்ளார். கள் என்பது போதை தரும் பானம் என்று ரஜினி, கமல் நிரூபித்தால் அவர்களுக்கு ரூ.10 கோடி தருவதாக அவர் சவால் விடுத்துள்ளார். இதுகுறித்து நல்லசாமி மேலும் கூறியதாவது:

ஜெயலலிதா மறைவுக்கு பின்னரும், கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்ட பின்னரும் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப நடிகர், நடிகையர் அரசியலுக்கு வர துடிக்கின்றனர். அரசியலுக்கு வருமுன் நடிகர்கள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தகுதியில்லாதவர்கள் அரசியலுக்கு வந்து நாட்டை கெடுக்க வேண்டாம்.

கள்' என்பது ஒரு தடைசெய்யபட்ட போதைப்பொருள் என்பதை நிரூபித்துவிட்டால், உங்களுக்கு அரசியலுக்கு வரக்கூடிய தகுதி இருப்பதாக ஏற்றுக்கொள்கிறோம்.  அதுமட்டுமின்றி கள்' ஒரு போதைப்பொருள் என்று நிரூபித்துவிட்டால் 10 கோடி பரிசு கொடுத்து 'கள்' இயக்கத்தையே களைத்துவிடுகிறோம்

உலகில் எந்த நாட்டிலும் கள் இறக்குமதிக்கு தடையில்லை. ஆனால் தமிழகத்தில் மட்டும் தான் இந்த த்டை உள்ளது. ஜல்லிக்கட்டுக்குத் திரண்டதுபோல், கள்ளுக்குள்ள தடையை நீக்கக் கோரி, ஒட்டு மொத்த தமிழக மக்களும் போராட வேண்டும் என்று நல்லசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

LOADING