Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம்! – ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

chidambaram
, திங்கள், 18 டிசம்பர் 2023 (10:35 IST)
உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் பஞ்சபூத தலங்களில் ஆகாயத்தலமாக விளங்குகிறது.


 
இத்திருக்கோவிலில் ஆண்டுக்கு இருமுறை தேரோட்டம் மற்றும் தரிசன விழா நடைபெறுவது வழக்கம்,மார்கழி மாதத்தில் ஆருத்ர தரிசன விழாவும் ஆனி மாதத்தில் ஆனி திருமஞ்சன விழாவும் மிக விமர்சையாக நடைபெறும்.

அதன்படி இந்த ஆண்டு மார்கழி மாத ஆருத்ர தரிசன உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது,

நடராஜர் இருக்கும் பொற்சபை எதிரில் உள்ள கொடி மரத்தில் வேத மந்திரங்கள் முழங்க உற்சவ ஆச்சாரியார் மீனாட்சிநாத தீட்சிதர் கொடியினை ஏற்றி வைத்தார்,இந்த உற்சவ விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் சிவனடியார்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து வரும் 10 நாட்கள் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெறுகிறது.

ஒவ்வொரு நாளும் பஞ்சமூர்த்தி சுவாமிகள் ஒவ்வொரு வாகனத்தில் நான்கு வீதிகளிலும் வீதியுலா வருவது குறிப்பிடத்தக்கது, குறிப்பாக முக்கியமான நிகழ்வான தேரோட்டம் வருகின்ற 26 ஆம் தேதி நடைபெறுகிறது.

தேரோட்டம் முடிந்த பின்பு இரவு எட்டு மணி அளவில் ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏகத்தாள லட்சார்ச்சனை நடைபெறுகிறது.

அதனைத் தொடர்ந்து ஆருத்ர தரிசன விழா 27ஆம் தேதி நடைபெறுகிறது, முன்னதாக அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது

பின்னர் 10 மணி அளவில் சித்சபையில் ரகசிய பூஜையும் பஞ்சமூர்த்தி வீதி உலா வந்த பின்னர் பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆருத்ர தரிசன விழா நடைபெற உள்ளது.

அதன் பின்பு ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது, 28ஆம் தேதி வியாழக்கிழமை பஞ்ச மூர்த்தி முத்துபல்லாக்கு வீதி உலா உடன் உற்சவம் முடிவடைகிறது, விழாவிற்கான ஏற்பாடுகளை பொது தீட்சிதர்களின் கமிட்டி செயலாளர் சிவராம தீட்சிதர் மற்றும் பொது தீட்சிதர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

பாதுகாப்பு பணியை பொறுத்தவரையில் சேத்தியாத்தோப்பு DSP ரூபன்குமார் தலைமையில் 70க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு ஆண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில்.. மிதக்கும் காயல்பட்டினம்.. தமிழ்நாடு வெதர்மேன்..!