Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பொதுசுத்திகரிப்பு நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்படாமல் அப்படியே வெளியேற்றப்படும் கழிவு நீர்

பொதுசுத்திகரிப்பு நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்படாமல் அப்படியே வெளியேற்றப்படும் கழிவு நீர்
, சனி, 24 நவம்பர் 2018 (16:42 IST)
நகராட்சியின் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் பொதுசுத்திகரிப்பு நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்படாமல் அப்படியே வெளியேற்றப்படும் கழிவு நீர். கரூர் அருகே கிராம மக்களின் சோக நிலை


கரூர் பெரு நகராட்சியானது, ஏற்கனவே இருந்த கரூர், இனாம் கரூர், தாந்தோன்றிமலை நகராட்சி என்று மூன்று நகராட்சிகளையும், சணப்பிரட்டி என்கின்ற கிராமத்தினையும் ஒன்றிணைத்து கரூர் பெருநகராட்சியானது, இந்த கரூர் பெருநகராட்சியில் இருந்து பொதுமக்களின் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ், அனைத்து இடங்களில் இருந்து வரும் கழிவுநீரை, கரூர் அடுத்த அரசுகாலனி பகுதியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரித்து அதை வாய்க்கால் மூலமாக பாசன வாய்க்கால்களில் கலந்து விடுகின்றனர்.  தற்போது, சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு செய்யாமல், அப்படியே அந்த கழிவுநீரை வெளியேற்றி வருகின்றனர்.
மேலும் அந்த பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் பொதுசுத்திகரிப்பு நிலையத்தில் சுமார் 65 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றிய நிலையில் தற்போது ஆட்குறைப்பு என்ற பெயரில் தற்போது சுமார் 13 நபர்களை மட்டும் பணியில் வைத்துக் கொண்டு ஆளுங்கட்சியினரின் காண்ட்ராக்ட் என்பதினால் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் கழிவு நீரை, அமராவதி ஆற்றில் இருந்து பிரியும் பள்ளபாளையம் ராஜவாய்க்காலின் கிளை வாய்க்காலான கோயம்பள்ளி பாசன வாய்க்காலில் மறைமுகமாக இரவு நேரத்தில் அப்படியே விட்டு விடுவதினால் அதே பகுதியில் சந்தனகாளிப்பாளையம் என்கின்ற கிராமத்தில் சாமியார் தோட்டம் பகுதியில் உள்ள நீர்மேல்நிலைத்தேக்க தொட்டிக்கு, இங்குள்ள, சந்தன காளிப்பாளையம் வாய்க்காலை ஒட்டிய, பாதாள கிணறு மூலம் நீர் ஏற்றுகின்றனர்.

ஆனால் இந்த வாய்க்காலில் இந்த விஷக்கழிவு நீர் கலப்பதினால், நீர் ஊற்றிலும் அப்படியே அந்த விஷக்கழிவு நீர் கலப்பதாக பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்துள்ளனர். ஆனால் அதை கண்டும் காணாமல், அப்படியே விட்டு விடும் மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியப்போக்கிற்கு கண்டனம் தெரிவிக்கும் அக்கிராம மக்களுக்கு, ஏற்கனவே தெருவிளக்கு, சாலை வசதிகள் ஆகியவை ஏதுவும் இல்லாத நிலையில், தற்போது குடிக்கும் குடிநீரும் விஷ நீராக மாறி வருவதற்கு பெரும் கண்டனம், தெரிவித்தும், ஆங்காங்கே கொசுக்களினால் பல்வேறு நோய்கள் உருவாகி வரும் நிலையில், இந்த விஷக்கழிவு நீரினால் பெரும் ஆபத்து ஏற்படும் நிலையில் கரூர் மாவட்ட நிர்வாகமும், கரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகமும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் பல்வேறு போராட்டங்களை நடத்த உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் எச்சரித்துள்ளனர்.

சி.ஆனந்தகுமார்Karur, karur news, tamilnadu,

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நம் பூமியின் இறுதி நாள் எப்போது : அறிஞர்கள் தகவல் ...