Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அப்துல்கலாம் வீட்டிலிருந்து அரசியல் பிரவேசத்தை தொடங்கினார் கமல்ஹாசன்

அப்துல்கலாம் வீட்டிலிருந்து அரசியல் பிரவேசத்தை தொடங்கினார் கமல்ஹாசன்
, புதன், 21 பிப்ரவரி 2018 (07:58 IST)
அப்துல்கலாம் வீட்டிலிருந்து நடிகர் கமல்ஹாசன் இன்று தனது அரசியல் பிரவேசத்தை  துவங்கியிருக்கும் நிலையில், கமல் கலாமின் சகோதரரிடம் ஆசி பெற்றார்.
முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி டி.என்.சேஷன்,மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் தனிச்செயலாளராக பணியாற்றிய, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான செல்வராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, திமுக தலைவர் கருணநிதி, நடிகர் ரஜினிகாந்த், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரை சந்தித்து பேசினார்.
 
இந்நிலையில் இன்று காலை  இராமேஸ்வரத்தில் அப்துல்கலாம் பயின்ற பள்ளிக்கு செல்ல நினைத்த கமலுக்கு அனுமதி இல்லை என மண்டபம் ஒன்றிய தொடக்க கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது. 
 
இதனையடுத்து அப்துல்கலாம் வீட்டிற்கு சென்ற கமல்ஹாசனை அப்துல்கலாமின் பேரன் சலீம் வரவேற்றார். மேலும் அப்துல்கலாமின் சகோதரர் முத்துமீரான் மரைக்காயரை சந்தித்து ஆசி பெற்றார். அப்துல்கலாம் பெற்ற பரிசுகள் கோப்பைகள் ஆகியவற்றை பார்வையிட்டார். அப்துல்கலாம் பயின்ற பள்ளிக்கு உள்ளே செல்லாமல் வெளியே இருந்து பார்வையிட இருக்கிறார் கமல். பின்னர் அப்பகுதி மீனவர்களை சந்திக்க உள்ளார். பின் அப்துல்கலாமின் நினைவிடத்திற்கு செல்கிறார். 
 
பின் ராமநாதபுரத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இறுதியாக மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் மாலையில் தன் கட்சி கொடியை ஏற்றி வைத்து கட்சியின் பெயரையும் அறிவிக்கவுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அப்துல்கலாம் பயின்ற பள்ளிக்கு செல்ல நடிகர் கமல்ஹாசனுக்குத் தடை