Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜெயலலிதா நைட்டியில் இருந்த வீடியோ உள்ளது: தினகரன் புது தகவல்!

ஜெயலலிதா நைட்டியில் இருந்த வீடியோ உள்ளது: தினகரன் புது தகவல்!

ஜெயலலிதா நைட்டியில் இருந்த வீடியோ உள்ளது: தினகரன் புது தகவல்!
, திங்கள், 25 செப்டம்பர் 2017 (13:11 IST)
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான சர்ச்சை சிறிய இடைவெளிக்கு பின்னர் தற்போது மீண்டும் வெடித்துள்ளது. இந்நிலையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ இருப்பதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார்.


 
 
சில நாட்களுக்கு முன்னர் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது, ஜெயலலிதாவை சந்திக்க வருபவர்கள் அனைவரும் ஜெயலலிதா இருக்கும் அறைக்கே செல்லவில்லை. யாரையும் சசிகலா அனுமதிக்கவில்லை. ஜெயலலிதா அறைக்கு சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் மட்டுமே செல்ல முடிந்தது.
 
ஒருவேளை ஜெயலலிதாவை நாங்கள் நேரில் சந்தித்தால் தான் எப்படி கொல்லப்படுகிறோம் என அவர் சொல்லிவிடுவார் என யாருக்கும் அனுமதி வழங்கவில்லை. அவர் இட்லி சாப்பிட்டார், சட்னி சாப்பிட்டார், அவரை நாங்கள் பார்த்தோம் என பொய் கூறினோம் அவர் உண்மையல்ல என கூறினார்.
 
இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு சந்தேகங்களையும், குழப்பங்களையும் ஏற்படுத்தியது. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தினகரன் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற சிசிடிவி வீடியோ இருப்பதாகவும், அதனை சசிகலாவின் அனுமதியை பெற்று வெளியிடுவது குறித்து முடிவு செய்வோம் எனவும் கூறி பரபரப்பை மேலும் கொஞ்சம் கூட்டினார்.
 
இந்த சூழலில் தற்போது மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது அவர் டிவி பார்ப்பது போல சசிகலா அவரை வீடியோ எடுத்தார். அந்த வீடியோவில் ஜெயலலிதா எடை குறைந்து நைட்டியில் இருந்தார். அதனால் அந்த வீடியோவை வெளியிடவில்லை.
 
ஜெயலலிதாவின் மரணம் குறித்த விசாரணை நடக்கும் போது அதனை அளிப்போம். அவரது மரணம் குறித்து சிபிஐ, இண்டர்போல் விசாரணை வைத்தாலும் சந்திக்க தயார் என தினகரன் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எடப்பாடி அரசுக்கு திமுக வைத்த செக் - நீதிமன்றத்தில் வழக்கு