Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உ.பி., முதல்வர் காலில் நடிகர் ரஜினிகாந்த் விழுந்தது வருத்தமாக இருக்கிறது- ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

உ.பி., முதல்வர் காலில்  நடிகர் ரஜினிகாந்த் விழுந்தது வருத்தமாக இருக்கிறது- ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
, புதன், 23 ஆகஸ்ட் 2023 (12:59 IST)
காங்கிரஸ் மூத்த தலைவரும்,  ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏவுமான .வி.கே.எஸ் இளங்கோவன்,  'தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு தேவையில்லாத இடையூறுகள் செய்து வருகிறார்' என்று தெரிவித்துள்ளர்.

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில், சமீபத்தில், டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவி மற்றும் 10 உறுப்பினர் பதவிகளுக்கும் பரிந்துரை பட்டியலை தமிழக அரசு ஆளுனருக்கு அனுப்பியது. ஆனால் தமிழக அரசின் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்காமல்  ஒருமாதமாக ஆளுநர் நிறுத்திவைத்தியுள்ளதாகத் தகவல் வெளியானது.

பணி நியமனங்களை விரைந்து மேற்கொள்ள டிஎன்பிஎஸ்சி தலைவர் மற்றும் உறுப்பினர் பணியிடங்களை நிரப்ப வேண்டியது அவசியம் என தமிழக அரசு தெரிவித்த நிலையில், ஆனால் தமிழக அரசின் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்காமல்  ஒரு மாதமாக ஆளுநர் நிறுத்திவைத்தியுள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

‘’தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசிற்கு தேவையில்லாத இடையூறுகள் செய்து வருகிறார்.  டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திரபாபுவை நியமனம் செய்ய ஆளுநர் தடையாக உள்ளார்.  ஆளுநர் மீது தமிழக மக்களுக்குக் கோபமிருக்கிறது’’ என்று தெரிவித்தார்.

மேலும், பாஜக தலைவர் அண்ணாமலையில் பாதயாத்திரை பற்றிய கேள்விக்கு, ‘’பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரைபோகவில்லை, வாகன யாத்திரை சென்றிருக்கிறார்’’ என்றார்.

நடிகர் ரஜினிகாந்த் உத்தரபிரதேச மாநில முதல்வர் காலில் விழுந்து வணங்கியது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர்,  ‘’நடிகர் ரஜினி உத்தரபிரதேச  மாநில முதல்வர் காலில் விழுந்தது மனதிற்கு வருத்தமக உள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தாமாக முன்வந்து விசாரிக்கும் சென்னை உயர்நீதிமன்றம்: அரசு வழக்கறிஞர் எதிர்ப்பு