Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழிலும் இனி இணையதள முகவரி: முக்கிய அறிவிப்பு

தமிழிலும் இனி இணையதள முகவரி: முக்கிய அறிவிப்பு
, திங்கள், 13 ஆகஸ்ட் 2018 (10:48 IST)
இதுவரை இணையதள முகவரியை ஆங்கிலத்தில் மட்டுமே உலகம் முழுவதும் பயன்படுத்தி வந்த நிலையில் விரைவில் தமிழ் உள்பட 22 மொழிகளில் இணையதள முகவரியை பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது நடைமுறைக்கு வந்தால் இனி தமிழில் 'வெப்துனியா.காம்' என்றே டைப் செய்து இணையதளத்திற்கு செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது
 
இதுகுறித்து சர்வதேச பெயர் மற்றும் எண்கள் ஒதுக்கீட்டு அமைப்பு கூறியபோது, 'இணையதள முகவரிகளை உருவாக்குவதை கட்டுப்படுத்தி வருவதாகவும், விரைவில் தமிழ் உட்பட 22 இந்திய மொழிகளில் இணையதள முகவரிகளை உருவாக்கும் வசதி அறிமுகம் செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளது. மேலும் தமிழ், வங்காளம், தேவநாகரி, குஜராத்தி, குர்முகி, கன்னடம், மலையாளம், ஒரியா, தெலுங்கு ஆகிய ஒன்பது மொழிகளில் இணையதள முகவரி அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும்  சர்வதேச பெயர் மற்றும் எண்கள் ஒதுக்கீட்டு  அமைப்பின் இந்தியத் தலைவர் சமிரான் குப்தா கூறியுள்ளார். இந்த அறிவிப்பு தமிழ் உள்பட இந்திய மொழிகளுக்கு கிடைத்த பெருமையாக கருதப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் மாரடைப்பால் மரணம்