Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பள்ளிக்கல்விக்கு கடந்த பட்ஜெட்டை விட கூடுதலாக ரூ. 3743 கோடி ஒதுக்கீடு..!!

TN Budget

Senthil Velan

, திங்கள், 19 பிப்ரவரி 2024 (12:07 IST)
பள்ளிக்கல்விக்கு கடந்த பட்ஜெட்டை விட கூடுதலாக ரூ. 3743 கோடி இந்த பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 
தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகிறார். அதில் உயர்கல்வித்துறைக்கு கடந்த பட்ஜெட்டை விட கூடுதலாக 1,245 கோடி இந்த பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2023-24 பட்ஜெட்டில் ரூ. 6,967 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், 2024-25 பட்ஜெட்டில் ரூ. 8,212 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
 
 
பள்ளிக்கல்விக்கு கடந்த பட்ஜெட்டை விட கூடுதலாக ரூ. 3743 கோடி இந்த பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  2023-24 பட்ஜெட்டில் ரூ. 40,299 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2024-25 பட்ஜெட்டில் ரூ. 44,042 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.  ஒரு லட்சம் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க ரூ. 2500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 
மருத்துவத்துறைக்கு கடந்த பட்ஜெட்டை விட கூடுதலாக ரூ. 1,537 கோடி இந்த பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

 
பணிபுரியும் மகளிருக்கான தோழி விடுதிகளை புதியதாக அமைக்க ரூ. 26 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு ரூ. 13,720 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நகரங்கள் முழுவதும் இலவச வைஃபை.. முக்கிய நகரங்களில் நியோ டைடல் பார்க்! – இளைஞர்களை கவரும் தமிழக பட்ஜெட் 2024!