Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போகிப் பண்டிகை கொண்டாட 14 ந் தேதி அரசு உள்ளுர் விடுமுறை

போகிப் பண்டிகை கொண்டாட 14 ந் தேதி அரசு உள்ளுர் விடுமுறை
, புதன், 9 ஜனவரி 2019 (10:52 IST)
போகிப் பண்டிகையை முன்னிட்டு வரும் 14 ந் தேதி (திங்கட்கிழமை)  தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் உள்ளுர் விடுமுறை  அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 


 
இது குறித்து பொதுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது, பல்வேறு தரப்பட்ட சங்கங்கள், மக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளில் பொங்கல் பண்டிகை வரும் 15 ந் தேதி முதல் 17 ந் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. அனைவரும் தங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் சொந்த ஊருக்குச்  சென்று பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கு ஏதுவாக 14 ந் தேதி தமிழகம் முழுவதும் ள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிக் கூடங்கள், கல்லுாரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளுர் விடுமுறை அளிக்குமாறு கேட்டுள்ளனர். 
 
 அதனை பரிசீலித்து 14 ந் தேதி திங்கட் கிழமை தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்களுக்கும், அனைத்து கல்வி நிறுவனங்களும் உள்ளுர் விடுமுறை அறிவித்து, அந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், 9.2.2019 அன்று சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.
 
இந்த உள்ளுர் விடுமுறை தினம் செலாவாணி முறிச்சட்டத்தின் கீழ் அறிவிக்கப்படாததால் , அவசர அலுவலகங்களை கவனிக்கும் பொருட்டு அனைத்து மாவட்டங்களில் உள்ள கருவூலம், சார்நிலை கருவூலங்களும் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்பட தகுந்த ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர்கள்  செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. 
 
அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் வரும் 12 ந் தேதி முதல் 17 ந்  தேதி வரை தாெடர்ந்து விடுமுறை அளிக்கப்பட உள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மக்களவையில் தமிழகத்தின் குரலாக ஒலித்த தம்பிதுரை – முழுப்பேச்சு தமிழில்