Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எடப்பாடி - டிடிவி அணியினர் மோதல் : கரூரில் களோபரம் (வீடியோ)

எடப்பாடி - டிடிவி அணியினர் மோதல் : கரூரில் களோபரம் (வீடியோ)
, திங்கள், 26 மார்ச் 2018 (16:27 IST)
கரூரில் கூட்டுறவு வீடு கட்டும் சங்க தேர்தல் வேட்பு மனு தாக்கலின் போது ஆளுகின்ற எடப்பாடி பழனிச்சாமி கட்சியினர், டிடிவி அணியினரை தாக்கி அராஜகம் செய்தனர்.

 
தமிழகத்தில் நான்கு கட்டங்களாக நடைபெறும் கூட்டுறவு சங்கங்களின் வேட்பு மனு தாக்கல் கரூரில் முதல் கட்டமாக இன்று தொடங்கியது. 18 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், 15 பால் கூட்டுறவு சங்கங்கள், 15 கைத்தறி கூட்டுறவு சங்கங்கள், 3 வீட்டு வசதி கூட்டுறவு சங்கங்கள் என 64 கூட்டுறவு சங்கங்களின் இயக்குநர்கள் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. 
 
கரூர் சாமிநாதபுரம் வடக்கில் வேட்பு மனு தாக்கல் இன்று காலை 12 மணிக்கு நடைபெற்றது. அப்போது எடப்பாடி அணியினர் முதலில் வேட்பு மனு தாக்கல் செய்ய சென்றனர். பின்னர் அடுத்து வந்த டிடிவி அணியினரை வேட்பு மனு தாக்கல் செய்ய போலீசார் அனுமதிக்காமல் வாயிற் படியிலேயே தடுத்து நிறுத்தியதால் இரண்டு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 
 
25 நிமிட வாக்கு வாதத்தில் போலீசாருக்கும், டிடிவி அணியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த டிடிவி அணியினர் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் டிடிவி அணியினர் 5க்கும் மேற்பட்டோர் போலீசார் தடையையும் மீறி உள்ளே சென்றனர். இதை தொடர்ந்து டிடிவி வாழ்க என டிடிவி அணியினரும் எடப்பாடி வாழ்க என எடப்பாடி அணியினரும் மாறி மாறி கோஷமிட்டனர். 
 
இந்நிலையில், எடப்பாடி அணியினரின் டிடிவி அணியினர் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். அதில், கருர் டிஎஸ்பி கும்மராஜாவின் ஜிப் கண்ணாடி உடைந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளே சென்றிருந்த டிடிவி அணியினர் 8 க்கும் மேற்பட்டோரை வேட்பு மனு தாக்கல் செய்ய விடாமல் காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
 
போலீசாரின் அஜாக்கரதை மற்றும் ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்பட்ட தின் விளைவுதான் இந்த மோதலுக்கு காரணமாக அமைந்தது. அதில் சிலர், பெண்ணெண்றும் பாராமல் சேலைகளை களைய முற்பட்டனர். சிலர், கெட்ட வார்த்தைகளால் டி.டி.வி தினகரன் அணியினை சார்ந்த பெண் நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தினர்.
 
எடப்பாடி பழனிச்சாமி அணியினர் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட காட்சி கரூரை கலங்கடித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறுநீர் கழித்ததால், விபத்துக்குள்ளானவரை ஆம்புலன்ஸில் இருந்து கீழே தள்ளிய டிரைவர்...