Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்துக்கு மரண தண்டனை

ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்துக்கு மரண தண்டனை
, திங்கள், 19 பிப்ரவரி 2018 (16:44 IST)
சிறுமி ஹாசினி கொலை வழக்கில் குற்றவாளி தஷ்வந்துக்கு மரண தண்டனை விதித்து செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

சென்னை மவுலிவாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பாபு என்பவரின் மகள் ஹாசினி(6) வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருக்கும் போது திடீரென காணாமல் போனார். இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 
 
விசாரணையில், அதே குடியிருப்பில் வசித்து வந்த மென்பொருள் பொறியாளர் தஷ்வந்த் குற்றவாளி என்பது தெரியவந்தது. தஷ்வந்த் கையில் பையை எடுத்துச் சென்ற சிசிடிவி கேமரா காட்சி மூலம் சந்தேகம் அடைந்த போலீஸார் விசாரணை நடத்தியதில் தஷ்வந்த சிக்கினார். ஹானிசியை பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக்கொன்றதை ஒப்புக்கொண்டார்.

webdunia


இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. 6வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து இவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைந்தனர். பின்னர் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் அவர் மீது இருந்த குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

ஜாமீனில் வெளிவந்த தஷ்வந்த் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். செலவு பணம் கொடுக்காத தாயை கொன்றுவிட்டு மும்பை தப்பிச் சென்றார். பின்னர் இவரை காவல்துறையினர் தேடி கண்டுபிடித்து மீண்டும் புழல் சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து, செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில், கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த ஹாசினி கொலை வழக்கின் வாத,பிரதிவாதங்கள் முடிந்து, நீதிபதி வேல்முருகன் தற்போது தீர்ப்பு வழங்கினார். அதற்கு முன்பே குற்றவாளி தஷ்வந்த் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது தீர்ப்பளித்த நீதிபதி, இந்த வழக்கில் தஷ்வந்த் குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிபதி, கொலை மற்றும் குற்றத்தை மறைத்தல் என 366, 363, 354, 202, 302 போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் தஷ்வந்த் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.
 
எனவே தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை அல்லது இரட்டை ஆயுள் தண்டனை விதிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.நீதிமன்ற தீர்ப்பு வெளியானதும் ஹாசினியின் தந்தை கண்ணீர் விட்டு அழுத சம்பவம் நெஞ்சை உருக்கியது. மேலும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், எனது மகளுக்கு ஏற்பட்டதுபோல் வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெற்ற மகளை வெட்டிக் கொன்ற கொடூர தந்தை