Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போயஸ் கார்டனை சிபிஐ கைப்பற்ற வேண்டும்: தீபா

போயஸ் கார்டனை சிபிஐ கைப்பற்ற வேண்டும்: தீபா
, சனி, 17 பிப்ரவரி 2018 (09:14 IST)
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அவ்வப்போது அரசியல் பரபரப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் நேற்று சேலம் பகுதியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர்.அம்மா தீபா பேரவை கூட்டத்தில் கலந்து கொண்டு ஆவேசமாக பேசினார். இந்த கூட்டத்தில் தீபா பேசியதாவது:

அண்ணா, எம்.ஜி.ஆரை  கண்டெடுத்தார். எம்.ஜி.ஆர், அம்மாவைக் கண்டெடுத்தார். நீங்கள் என்னைக் கண்டெடுத்திருக்கிறீர்கள். நானாக அரசியலுக்கு வரவில்லை. நீங்கள் அழைத்ததால் வந்தேன். அம்மாவுக்கென்று பதவி ஆசை இல்லை, தனி வாழ்க்கை இல்லை. அவரின் புகழுக்குக் கலங்கத்தை ஏற்படுத்திய கூட்டத்தை மக்கள் தட்டிக்கேட்க வேண்டும்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அம்மாவின் மரணத்தை விசாரிப்பதற்கு ஆறுமுகசாமி கமிட்டியை நியமித்தார். அந்தக் கமிட்டி, இதுவரை என்ன கண்டுபிடித்தீர்கள் என்று மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். இந்த ஆணையம், ஒரு கண்துடைப்பு நாடகம். இன்னும் எத்தனை நாள்கள் மக்களை ஏமாற்றப்போகிறார்களோ தெரியவில்லை. என்மீதும், என் குடும்பத்தின்மீதும், நிர்வாகிகள்மீதும் பொய்யான புகார் கூறி எங்கள் செயல்பாட்டைத் தடைசெய்கிறார்கள்.

தமிழக மக்களை, அம்மா காவல் தெய்வமாக இருந்து காப்பாற்றினார். என் லட்சியப் பயணத்திலும் நீங்கள் உறுதுணையாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். நான் கோடிகளை நம்பி அரசியலுக்கு வரவில்லை.  ஏழரைக் கோடி மக்களை நம்பி வந்திருக்கிறேன். அத்தையின் வரலாற்றுப் புத்தகத்தில் நான் ஒரு பதிவாக இருப்பேன். மக்களை ஏமாற்றும் ஆணையத்தை, போயஸ் கார்டனையும் கைப்பற்றி சி.பி.ஐ விசாரித்தால் மட்டுமே அம்மா மரணத்தின் உண்மை தெரியவரும்'

இவ்வாறு தீபா பேசினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொருத்தது போதும் பொங்கி எழு தமிழா: பாரதிராஜா ஆவேசம்!