Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராமதாஸ்- அன்புமணி கருத்து வேறுபாடு ; கூட்டணியால் பா.ம.க. வில் குழப்பம் ?

ராமதாஸ்- அன்புமணி கருத்து வேறுபாடு ; கூட்டணியால் பா.ம.க. வில் குழப்பம் ?
, ஞாயிறு, 3 பிப்ரவரி 2019 (11:28 IST)
தமிழகத்தில் தேர்தலை முன்னிட்டு அனைத்துக் கட்சிகளும் கூட்டணி குறித்து அறிவித்துள்ள நிலையில் இன்னும் தேமுதிக வும் பாமக வும் மட்டும் எதுவும் அறிவிக்காமல் உள்ளன.

விரைவில் வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான மெகாக் கூட்டணி அமைய இருக்கிறது. இந்த கூட்டணியில் திமுக, காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், விசிக, மமக, முஸ்லிம் லீக் கட்சிகள் இணையவுள்ளது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. மேலும் இதில் காங்கிரஸுடன் கமலின் மக்கள் நீதி மய்யமும் தொகுதி உள் பங்கீடு செய்து கூட்டணியில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் எதிர்ப்புறமான அதிமுக அணியில் இருந்து கூட்டணிக்  குறித்து எந்த விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. ஆனால் அதிமுக அணியில் பாஜக இணைவது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது. அதேப் போல பாமக வும் அதிமுக அணியில் இருந்தால் பலம் அதிகமாகும் என டெல்லித் தலைமை நினைக்கிறது. இதுகுறித்து அதிமுக முக்கிய நிர்வாகிகள் பாமகவின் ராமதாஸோடு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
webdunia

ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் அன்புமணி ராமதாஸ் ஆரம்பம் முதலே ஆர்வம் காட்டாமல் உள்ளாராம். இதற்குக் காரணம் அன்புமணி திமுகக் கூட்டணிக்கு செல்லவே விருப்பம் காட்டுகிறாராம். ஆனால் அங்கிருந்து நேர்மறையான பதில் எதுவும் வராததால் காத்த்க்கொண்டிருக்கிறாராம். ஆனால் ராமதாஸோ அதிமுக கூட்டணிக்குச் செல்லலாம். அங்கு சென்றால் அதிகமான சீட் பெறமுடியும். மேலும் தேர்தல் நிதியும் அதிகமாகப் பெறலாம் என நினைக்கிறாராம். இதனால் கூட்டணி அமைப்பது யாருடன் என்பதில் ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதனால் அன்புமணியை  இழுப்பதற்கு இப்போது பாஜக களத்தில் இறங்கியுள்ளதாகவும் அமித் ஷா மூலம் அன்புமணியோடு பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. விரைவில் பாமக வில் இருந்து கூட்டணி குறித்த அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி!