Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இடைத்தேர்தலை விட சட்டமன்ற தேர்தலை நடத்த வேண்டும்: ப.சிதம்பரம்

இடைத்தேர்தலை விட சட்டமன்ற தேர்தலை நடத்த வேண்டும்: ப.சிதம்பரம்
, வியாழன், 25 அக்டோபர் 2018 (18:06 IST)
மூன்றாவது நீதிபதி சத்திய நாராயணன் இன்று 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில்  நீதிபதி சத்திய நாராயணன் சபாநாயகர் உத்தரவு செல்லும் என்று தன் இறுத் திர்ப்பு அளித்தார்.

ஏற்கனவே உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி இந்த வழக்கில் சபாநாயகர் அளித்த தீர்ப்பில் 18 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என உத்தரவிட்டார்.

ஆனால் இரண்டாம் நீதிபதியான சுந்தர் இந்த வழக்கில்ம் மாறுபட்டதீர்ப்பை வழங்கி அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார்.அதாவது, 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்தஹ்டு செல்லாது என தீர்ப்பு அளித்திருந்தார்.

இரு நீதிபதிகலுஅம் முரணான தீர்ப்பை வழங்கியதால் இவ்வழக்கின் இறுதி தீர்ப்பை வழங்குமாறு உயர் நீதிமன்றத்தால் மூன்றாவது நீதிபதியாக சத்திய நாரயணன் நியமிக்கப்பட்டார்.

தமிழகம் ழுவதும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில் தீர்ப்பு இன்று நீதிஅபதி சத்திய நாராயணனால் வாசிக்கப்பட்டது.

அப்போது 18 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என தீர்ப்பு வழங்கினார்.

இதனை ஆளுங்கட்சிகள் ஆரவாரத்துடன் கொண்டாடினர்.ஆனல் தினகரம் தரப்பினர் சோகம் தழுவிய முகத்துடன் இருந்தனர்.மேல்முறையீடு செய்யப்போவதாகவும் கூறுயுள்ளனர்.

இந்நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களின் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டால்  ஆறுமாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆஆணையர் ஓ.பி.ராவத் கூறியுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது:
webdunia

தகுதி நீக்கம் செய்யப்பட்ட  எம்.எல்.ஏக்களின் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டால் அடுத்த ஆறுமாதத்தில் தேர்தல் நடத்தப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து இந்த தேர்தல் விவகாரம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தன் டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில் ’இன்றைய உயர் நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு தமிழ்நாட்டில் தேர்தல்கள் நடத்துவதைத் தவிர்க்க முடியாது.18+2 தொகுதிகளில் இடைத்தேர்தலை நடத்துவதை விட முழு சட்டமன்ற தேர்தலை நடத்துவதே முறையாகும்’ இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜமால் கஷோக்ஜி கொலை..!தண்டனை உறுதி : சவூதி இளவரசர்