Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி! இழந்த பணம் கிடைப்பது எப்போது? – போலீஸார் தகவல்!

அரசு ஊழியர்களின் 6 நாள் சம்பளம் பிடித்தம்
, சனி, 22 ஏப்ரல் 2023 (14:21 IST)
ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன மோசடி வழக்கில் பணத்தை இழந்த மக்களுக்கு மீண்டும் பணத்தை தருவது குறித்து போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஆரூத்ரா கோல்டு நிறுவனம் என்ற பெயரில் தொடங்கப்பட்ட தனியார் நிதி நிறுவனம் ஏராளமான மக்களிடம் பணத்தை பெற்று மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஏராளமான புகார்கள் வந்த நிலையில் பொருளாதார சிறப்பு பிரிவு போலீஸார் ஆருத்ரா நிறுவனத்திற்கு தொடர்புடைய பல இடங்களில் சோதனை நடத்தியதுடன், மோசடியில் தொடர்புடைய ஹரிஷ், மைக்கெல் ராஜ் உள்ளிட்ட 13 பேரை கைது செய்துள்ளனர்.

இந்த மோசடியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணம் திரும்ப கிடைப்பது எப்போது என்ற கேள்வி இருந்து வருகிறது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள போலீஸார் “ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில் இதுவரை ரூ.6 கோடி பணம், 4 கிலோ தங்க நகைகள் மற்றும் 130 சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முடக்கப்பட்ட மற்றும் மீட்கப்பட்ட சொத்துகளை நீதிமன்றத்தில் ஒப்படைத்த பின்னர், அடுத்த 6 மாதத்தில் பணத்தை இழந்த மக்களுக்கு அளிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.

Edited by Prasanth,K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரமலான் பண்டிகை சிறப்பு தொழுகை: ஒருவொருக்கொருவர் ஆரத்தழுவி வாழ்த்து!