Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கமல்ஹாசனின் முதல் அரசியல் கூட்டத்தில் கலந்து கொள்கிறார் டெல்லி முதல்வர்

கமல்ஹாசனின் முதல் அரசியல் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்  டெல்லி முதல்வர்
, செவ்வாய், 20 பிப்ரவரி 2018 (08:41 IST)
டிகர் கமல்ஹாசன் நாளை இராமநாதபுரத்தில் உள்ள முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறார். மேலும் நாளை மாலை மதுரை ஒத்தக்கடையில் நடைபெறவுள்ள முதல்கூட்டத்தில் தனது புதிய அரசியல் கட்சியின் பெயரை அறிவித்து சிறப்புரையாற்றுகிறார்
 
கமல்ஹாசனின் முதல் அரசியல் கூட்டத்தில் பல்வேறு கட்சியின் அரசியல் தலைவர்கள், முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட பல விஐபிக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில் மதுரையில் நாளை நடைபெறும் கமல்ஹாசனின் முதல் அரசியல் பொதுக்கூட்டத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை வந்த அரவிந்த் கெஜ்ரிவால், கமல்ஹாசனை சந்தித்து பேசி, அரசியலிலும் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருவள்ளூரில் ஈபிஎஸ்-ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே கடும் வாக்குவாதம்