Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உதயநிதிக்கு ஒரு சவால் விடுகிறேன், 2024 மற்றும் 2026 தேர்தல்களை சனாதன தேர்தல்களாக வைத்துக் கொள்ளலாமா?

உதயநிதிக்கு ஒரு சவால் விடுகிறேன், 2024 மற்றும் 2026 தேர்தல்களை சனாதன தேர்தல்களாக வைத்துக் கொள்ளலாமா?
, புதன், 6 செப்டம்பர் 2023 (15:58 IST)
வரும் 2024 மற்றும் 2026 ஆம் ஆண்டு தேர்தல்களை சனாதன தேர்தலாக வைத்துக் கொள்ளலாமா என அமைச்சர் உதயநிதிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சவால் விட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
விருதுநகர் மாவட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
 
சனாதன தர்மம் என்றால் என்ன என்பதை உதயநிதி ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஆண்டாள் கோயிலில் 30 பிரசுரங்களை படித்துள்ளார், இதுவும் ஒரு வகையான சனாதன தர்மம் தான். இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் அரவணைத்து செல்லக்கூடியது சனாதன தர்மம்;
 
உதயநிதிக்கு ஒரு சவால் விடுகிறேன், 2024 மற்றும் 2026 தேர்தல்களை சனாதன தேர்தல்களாக வைத்துக் கொள்ளலாமா? திமுக சனாதனத்தை ஒழிப்போம் என தேர்தலில் பிரச்சாரம் செய்யட்டும், பாஜக  சனாதனத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும், மக்கள் யாருக்கு ஓட்டு போடுவார்கள் என பார்க்கலாம்" என அண்ணாமலை சவால்விட்டுள்ளார்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியா என்ற பெயரை பாரத் என்று மாற்றுவதில் தவறு ஏதும் கிடையாது: அமைச்சர் ரோஜா கருத்து..!