Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாளை அட்சய திருதியை நாள்.. தங்கம் மட்டும் தான் வாங்க வேண்டுமா? வேறு என்னவெல்லாம் வாங்கலாம்?

நாளை அட்சய திருதியை நாள்.. தங்கம் மட்டும் தான் வாங்க வேண்டுமா? வேறு என்னவெல்லாம் வாங்கலாம்?

Siva

, வியாழன், 9 மே 2024 (07:20 IST)
ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்குவதை பொதுமக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர் என்பதும் தங்க நகை கடைகளில் அன்றைய தினம் கூட்டம் அலைமோதும் என்பதும் தெரிந்தது. அந்த வகையில் நாளை அட்சய திருதியை நாள் என்ற நிலையில் தங்கம் மட்டும் தான் ஆக வேண்டுமா? அல்லது வேறு ஏதாவது பொருட்களை வாங்க முடியுமா என்பதையும் பார்ப்போம்

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஐதீகமாக இருக்கும் நிலையில் தங்கம் வாங்க முடியாதவர்கள் என்னென்ன வாங்கலாம் என்பதை பார்ப்போம்.

தங்கம் வாங்க முடியாதவர்கள் அரிசி, ஆடைகள், பாத்திரங்கள், உப்பு ஆகியவற்றில் எது வேண்டுமானாலும் வாங்கலாம் என்பதும் சுப காரிய தினங்களில் வாங்கும் எந்த பொருளை அட்சய திருதியை தினத்தில் வாங்கினாலும் நல்லது தான் என்றும் குறிப்பிடத்தக்கது

மேலும் அட்சய திருதியை நாளில் தானம் கொடுப்பதும் நல்லது, அது எந்த தானமாக இருந்தாலும் சரி, குறிப்பாக அன்னதானம் கொடுப்பது சிறப்பானது, அட்சய திருதியை மே 10ஆம் தேதி 4.17 மணி முதல் மே 11ஆம் தேதி அதிகாலை 2.50  மணி வரை உள்ளது என்பதால் இந்த நேரத்தில் பொருட்களை வாங்கி வீட்டில் செல்வத்தை குவித்து கொள்ளலாம்

அட்சய திருதியை நாளில் சுப முகூர்த்தமும் உண்டு. அன்றைய தினம் காலை 5.33 முதல் 7.14 வரை முகூர்த்த. அதே நாளில் அமிர்த முகூர்த்தம் காலை 8:56 முதல் 10:37 வரையும், மதியம் 12.18 மணி முதல் 1.59 மணி வரையும் சுபமுகூர்த்தம் உள்ளன. அதேபோல், மாலை 5.21 மணி முதல் இரவு 7.02 மணி வரை முகூர்த்தங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேப்டனுக்கு நாளை பத்ம பூஷன் விருது..! டெல்லி சென்றார் திருமதி.பிரேமலதா..!!