Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

50 சவரனில் 10 சவரன் குறைந்ததால் தாலி கட்டும் நேரத்தில் தலைமறைவான மணமகன்

50 சவரனில் 10 சவரன் குறைந்ததால் தாலி கட்டும் நேரத்தில் தலைமறைவான  மணமகன்
, செவ்வாய், 23 ஜனவரி 2018 (13:11 IST)
சமூகத்தில் பல ஆண்டுகளாக வேரூன்றியுள்ள வரதட்சணை என்ற கொடுமையை ஒழிக்க அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும், அதன் மீதான பிரச்சனைகள் ஓய்ந்த பாடில்லை
ஒருவர் தான் விரும்பும் பெண்ணை திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொள்ள கொடுக்கப்படும் ஏதாவது ஒரு சொத்து அல்லது விலை உயர்ந்த பொருட்கள் சீதானமாக பெறுவதற்கு பெயர் வரதட்சணை என்று அர்த்தமாகும். இது போன்ற பேச்சுவார்த்தை திருமணத்திற்கு முன்பு அல்லது திருமணம் நடக்கும் நாளில் எழுப்பபடும். இதனால் பல திருமணங்கள் பாதியில் நின்றுள்ள சம்பவங்களும் நடந்துள்ளது. இதை தடுக்கும் நோக்கத்தில் கடந்த 1961ம் ஆண்டு வரதட்சணை தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது.
 
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகரில் வசித்து வரும் ஜானகிராமனின் மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், மணமகன் வீட்டார் 50 சவரன் நகை, மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வரதட்சணையாக கேட்டுள்ளனர். இதனை கொடுக்க மணமகள் வீட்டார் சம்மதம் தெரிவித்திருந்த நிலையில், நேற்று திருமணம் நடைபெறவிருந்தது. 
 
இதற்கிடையில் வரதட்சனையாக கேட்ட 50 சவரனில் 10 சவரனை பிறகு தருவதாக, மணமகன் வீட்டாரிடம் ஜானகிராமன் கூறியுள்ளார். இதனால் தாலி கட்டும் நேரத்தில் மணமகன் தலைமறைவாகினார்.  இதனையடுத்து மணமகன் வீட்டாரை, மணமகள் வீட்டார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான மணமகனுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என மணமகள் வீட்டாரும், பொதுமக்களும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாமியார் வீட்டுக்கு செல்லப்போவது யார்?: தினகரனா? எடப்பாடியா?