Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோர விபத்தில் கல்லூரி மாணவி உட்பட 4 பேர் பலி

கோர விபத்தில் கல்லூரி மாணவி உட்பட 4 பேர் பலி
, வெள்ளி, 6 ஏப்ரல் 2018 (16:09 IST)
துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மினி வேனில், சென்ற கல்லூரி மாணவி உட்பட நான்கு பேர் உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லாரிகளில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டிருக்கும் போதிலும், மக்கள் பலர் சட்டத்தை மதிக்காமல் லாரிகளில் அபாயகரமான பயணம் மேற்கொள்கின்றனர். அப்படி பயணம் செய்யும் போது விபத்து ஏற்பட்டு, சிலர் பரிதாபமாக உயிரிழக்கின்றனர்.
 
இந்நிலையில் கடலூர் மாவட்டம் பெரியநெட்டனூர் கிராமத்தைச் சேர்ந்த 30 பேர் உறவினரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மினி லாரி மூலம் அருகிலிருக்கும் கிராமத்திற்கு சென்றுள்ளனர். லாரியை அதே ஊரைச் சேர்ந்த செல்வம்(40) என்பவர் ஓட்டினார்.
 
மினி லாரி திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோரம் நின்ற புளிய மரத்தில் மோதி கவிழ்ந்தது. மினி லாரியின் இடிபாடுகளுக்குள் சிக்கி அமுதா, ஜீவா, கலியம்மாள், தமிழரசன் ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். ஜீவா தனியார் கல்லூரியில் படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், இடிபாடுகளில் சிக்கிய 26 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இறந்தவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜக என் கைக்குள்; இப்போது நினைத்தால் கூட நான் பிரதமர்: பாபா ராம்தேவ் சர்ச்சை பேச்சு!