Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பண மதிப்பிழப்பின் போது கிறிஸ்டி நிறுவனம் ரூ.245 கோடி டெபாசிட் : விசாரணையில் அம்பலம்

பண மதிப்பிழப்பின் போது கிறிஸ்டி நிறுவனம் ரூ.245 கோடி டெபாசிட் : விசாரணையில் அம்பலம்
, திங்கள், 9 ஜூலை 2018 (12:59 IST)
பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது கிறிஸ்டி நிறுவனம் ரூ.245 கோடி டெபாசிட் செய்துள்ளது வருமான வரித்துறையினர் நடத்திய விசாரணையில்  தெரியவந்துள்ளது.

 
தமிழக அரசு சத்துணவு திட்டத்திற்கு உணவு பொருட்கள் வழங்கும் கிறிஸ்டி நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, கடந்த 5ம் தேதி தமிழகம் மற்றும் கர்நாடகாவில் உள்ள கிறிஸ்டி நிறுவனத்திற்கு சொந்தமான 76 இடங்களில் வருமான வரித்துறையின் சோதனையை தொடங்கினர். கிறிஸ்டி நிறுவன உரிமையாளர் வீடு, உறவினர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் 45க்கும் மேற்பட்ட அதிகாரிகள் 15 குழுக்களாக பிரிந்து சோதனை மேற்கொண்டனர். 
 
இரண்டாவது நாளாக 6ம் தேதி நடந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கணக்கில் வராத பணமாக ரூ.4 கோடியை அதிகாரிகள் கைப்பற்றினர். அதேபோல், வெளிநாட்டில் பணம் முதலீடு செய்யப்பட்டதற்கான ஆவணங்களும் சிக்கியுள்ளதாக தகவல் வெளியானது.
 
இந்நிலையில், நாமக்கல் உள்ளிட்ட பல இடங்களில் 5வது நாளாக இன்று நடைபெற்ற சோதனையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது கிறிஸ்டி நிறுவனம் வங்கியில் ரூ.245 கோடி டெபாசிட் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழக சட்டசபையில் தாக்கலானது லோக் ஆயுக்தா மசோதா...