Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

10ஆம் வகுப்பு தேர்வு: தேர்ச்சி விகிதம் 94.5 %

10ஆம் வகுப்பு தேர்வு: தேர்ச்சி விகிதம் 94.5 %
, புதன், 23 மே 2018 (09:13 IST)
தமிழகம் மற்றும் புதுவையில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது சற்றுமுன்னர் இந்த தேர்வின் தேர்ச்சி விகிதம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.
 
தமிழகம், புதுச்சேரியில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளின் தேர்ச்சி விகிதத்தை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ளார். இதன்படி 10ஆம் வகுப்பு தேர்வெழுதிய 9.5 லட்சம் மாணவர்களில் 8.97 லட்சம் மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10-ம் வகுப்பில் மொத்த தேர்ச்சி விகிதம் 94.5 %, என்றும் இவர்களில் மாணவிகள் - 96.4 %, மாணவர்கள்- 92.5 % என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
webdunia
இன்னும் சற்று நேரத்தில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை http://www.tnresults.nic.in  , http://www.dge.tn.nic.in  , http://www.dge.tn.gov.in   ஆகிய இணைய தளங்களில் தெரிந்துகொள்ளலாம். மேலும் மாணவர்களுக்கு செல்போன் மூலம் தேர்வு முடிவுகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், வரும் 28ம் தேதி தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்றும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்டெர்லைட் துயர சம்பவம்: கண்டனம் தெரிவித்த திரையுலக பிரபலங்கள்