Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொத்தமல்லி விதை ஊறவைத்த தண்ணீரை குடிப்பதால் என்ன நன்மைகள் !!

coriander
, புதன், 27 ஏப்ரல் 2022 (16:43 IST)
கொத்தமல்லி விதைகளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் கண் அரிப்பு, கண் அழற்சி மற்றும் கண் சிவத்தல் ஆகியவற்றை சரி செய்கிறது.


கொத்தமல்லி விதை ஊற வைத்த தண்ணீரை குடிப்பதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் கட்டுக்குள் இருக்கும். எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த தண்ணீரை தினமும் குடிக்கலாம்.

பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்சனை சரியாக இந்த தண்ணீரை வாரத்தில் இரண்டு முறை குடித்து வரலாம்.

150 மிலி தண்ணீரில் 3 கிராம் தனியா விதை பொடியை போட்டு கொதிக்க வத்தும் குடிக்கலாம். இதனால் எலும்புகள் வலுவாகும். எலும்பு சம்பந்தமான நோய்கள் வராது.

இன்சுலின் இரத்த சர்க்கரையை உறிஞ்சுதலை ஒழுங்கு படுத்துவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது. கொத்த மல்லி முகப்பரு மற்றும் தழும்புகளைக் குறைக்க உதவுகிறது.

கொத்தமல்லியில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. மேலும் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. காலையில் கொத்தமல்லித் தண்ணீரைக் குடிப்பதால், பளபளப்பான, மிருதுவான மற்றும் தெளிவான, சருமத்தைப் பெறவும் உதவுகிறது.

கொத்த மல்லி வீக்கம், இரைப்பை, வயிற்றுப்போக்கு, குமட்டல் போன்ற அனைத்து குடல் மற்றும் செரிமான பிரச்சினைகளுக்கும் நன்மை பயக்கிறது. இது நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளின் சிறந்த மூலமாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பல வியாதிகளை குணப்படுத்தும் அற்புத மருந்தாக விளங்கும் கறிவேப்பிலை !!