Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏராளமான நன்மைகளை அள்ளித்தரும் சப்ஜா விதை !!

Sabja seeds
, வியாழன், 7 ஜூலை 2022 (13:24 IST)
நெஞ்செரிச்சல், அசிடிட்டியால் மிகவும் அவதிப்படுபவர்கள் இரவில் ஊறவைத்த சப்ஜா விதையினை மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் பாலுடன் சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.


ஜீரண பாதையில் உள்ள புண்களை சப்ஜா விதை ஆற்றக்கூடிய தன்மை கொண்டது.  சிறுநீர் பாதையில் உண்டாகக்கூடிய புண்கள், சிறுநீரக எரிச்சல், சிறுநீர் தொற்று, வயிற்று புண் போன்ற பிரச்சனைகளை குணப்படுத்த சப்ஜா விதை மிகவும் உதவுகிறது.

பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் அடி வயிற்று வலி மற்றும் வெள்ளைப்படுதல் பிரச்சனையை சப்ஜா விதை குணப்படுத்தும்.  மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சப்ஜா விதையை இளநீரில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் நோயின் தாக்கம் குறையும்.

சப்ஜா விதைகளை குறைந்தது 4 முதல் 6 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். நன்றாக ஊறிய சப்ஜா விதையானது நன்கு பூத்து வழவழப்பாக ஜவ்வரிசி போன்று  இருக்கும். ஊறவைத்த சப்ஜா விதையுடன் ரோஸ் மில்க், நன்னாரி சர்பத், மில்க் ஷேக், பால், தண்ணீர் இவற்றில் எதில் வேண்டுமானாலும் சேர்த்து குடித்து வரலாம்.

உடல் சூட்டினால் மிகவும் அவதிப்படுபவர்கள் சப்ஜா விதையினை இரவு படுக்கைக்கு முன் தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் தண்ணீரில் ஊற வைத்த சப்ஜா விதையுடன் பால் அல்லது நாட்டு சக்கரை கலந்து குடித்தால் உடல் சூட்டிற்கு மிகவும் நல்லது.

மூல நோயினால் அவதிப்படுபவர்கள் சப்ஜா விதையை ஊற வைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் மூல நோய் பிரச்சனை விரைவில் குணமாகும். மேலும் உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் கழிவுகளை வெளியேற்ற இது உதவும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொத்தமல்லி இலையை தினமும் உணவில் சேர்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் !!