Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாயு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு உடனடி நிவாரணம் தரும் பிரண்டை...!

வாயு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு உடனடி நிவாரணம் தரும் பிரண்டை...!
பிரண்டையில் பல வகைகள் உள்ளன. இது ஒரு காயகல்பம். இதன் தண்டு, வேர், பழம் என அனைத்தும் மருத்துவ குணம் கொண்டது. வாயு சம்பந்தப்பட்ட நோய்கள் இருந்தால் வயிறு செரிமான சக்தியை இழக்கும். பிரனடைத் துவையல் நன்கு செரிமான சக்தியைத் தூண்டும். அஜீரணக்  கோளாறை நீக்கும்.
எலும்பு முறிவு ஏற்பட்டால், பிரண்டையை அரைத்து அடிபட்ட இடத்தின் மீது கட்டியும், பிரண்டையை துவையலாகச் செய்து சாப்பிட்டும் வந்தால் எலும்பு  முறிவால் ஏற்படும் வலி, வீக்கம் குணமாகும். உடைந்த எலும்புகள் விரைவில் இணைந்து எளும்புகள் பலம்பெறும்.
 
பெண்களுக்கு சூதக வலியின்போது ஏற்படும் முதுகு வலி, இடுப்புவலி போன்றவைக்கும் பிரண்டை சிறந்த மருந்தாகும். பிரண்டை உடலில் உள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்றுநோய்க்கு கொடுக்கப்படும் மருந்துகளில் பிரண்டையும் இடம் பெற்றிருக்கும்.
 
இரத்த குழாய்களில் கொழுப்புகள் படிந்து இரத்த ஓட்டத்தின் வேகத்தைக் குறைக்கும். இதனால் இருதயத்திற்குத் தேவையான இரத்தம் செல்வது தடைப்படும். இத்தகைய நோய்க்கு பிரண்டைத் துவையல் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராகும். இதயல் பலப்படும்.
webdunia
அடிபட்ட வீக்கம், சுளுக்கு, பிடிப்பு, வலி போன்றவற்றுக்கு இது சிறந்த நிவாரணம் தரக்கூடியது. துவையல் செய்து சாப்பிடுவதன் மூலமே நல்ல நிவாரணம்  கிடைக்கும். இதன் துவையல் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்யும்; ஞாபகசக்தியை பெருக்கும்; மூளை நரம்புகளை பலப்படுத்தும்; எலும்புகளுக்கு சக்தி  தரும். ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவை நிறுத்துவதுடன் வாய்வுப் பிடிப்பைப் போக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இடுப்பை சுற்றியுள்ள சதையினை குறைக்க வக்ராசனம்