சில நோய்களுக்கு மருந்தாகும் பழங்களும் அதன் சத்துகளும்...!

எலுமிச்சைப்பழம்: கண்களுக்கு குளிர்ச்சி, நீரிழப்பை தடுக்கும். கல்லீரலை பாதுகாக்கும். ரத்த ஓட்டம் சீராகும். தீராத தலைவலியும் தீரும். வயிற்றுக் கடுப்பு  நீங்கும்.
மாதுளை: ரத்தத்தை சுத்திகரிப்பதில் இப்பழம் முக்கியப்பங்கு வகிக்கிறது. ரத்தத்தின் மோசமான கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. ரத்தம் உற்பத்தியாவதை ஊக்குவிக்கும்பழமாகவும் உள்ளது. இதிலுள்ள ஆண்டிஆக்சிடண்ட்கள் சர்க்கரை நோயாளிகளை தொந்தரவு செய்வதில்லை.
 
பேரிக்காய்: பற்கள், எலும்புகள் பலப்படும். இதயம் வலுவாகும், இரைப்பை, குடல், சீரண உறுப்புகள் வலுப்பெறும்.
 
நாவல்பழம்: கல்லீரல் கோளாறு நீங்கும். குடல்புண்ணை அகற்றும். நீரிழிவுக்கு அருமருந்து.
 
கொய்யா: செரிமானத்துக்கேற்ற நார்ச்சத்தை கொண்டுள்ளது. இதனால் மலச்சிக்கல் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. சர்க்கரை நோயாளிகள் பொதுவாக மலச்சிக்கலால் பாதிக்கப்படுவர். இப்பழங்களில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி சத்துக்கள் உள்ளன. 
 
பேரீச்சம்பழம்: ரத்த விருத்தியாகும். சருமம் பளபளப்பாகும். கண் கோளாறுகள் வராது. இருமல், கபம் போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல மருந்து.
 
சத்துக்குடி: பசியைத் தூண்டும், மூளைச் செல்களை பலப்படுத்தும். ரத்த அழுத்தத்திற்கு நல்லது. கர்ப்பப்பையை பலமாக்கும்.
 
பப்பாளி: சிறுநீர் கல்லடைப்புக்கு அருமருந்து, நரம்புகள் பலமாகும். ஆண்மை விருத்தியாகும். ஞாபக சக்தி மேம்படும். மாதவிடாய் கோளாறுகள் நீங்கும்.
 
சீதாப்பழம்: மலச்சிக்கல் நீங்கும். பருக்களை அகற்றும். தலைமுடி மிருதுவாகும். பேன், பொடுகு தொல்லையில் இருந்து தலைமுடியை பாதுகாக்கும். குளிர்காய்ச்சல் நீங்கும். இதயம் பலப்படும்.
 
ஆரஞ்சு: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். வாழ்நாளில் இளமைக்காலத்தை நீட்டிக்கும். பசியைத் தூண்டும். மலச்சிக்கலைப் போக்கும், பல் சொத்தை  வராது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

LOADING