Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இவர்களெல்லாம் இஞ்சி டீயை அதிகமாக குடிக்கக் கூடாது ஏன் தெரியுமா...?

இவர்களெல்லாம் இஞ்சி டீயை அதிகமாக குடிக்கக் கூடாது ஏன் தெரியுமா...?
இஞ்சி வயிறு மற்றும் ஜீரண சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை குணப்படுத்தும். முக்கியமாக ஜலதோஷம் இருமலை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டுள்ளது. வாந்தி, குமட்டலுக்கும் மருந்தாக இஞ்சி பயன்படுகிறது.
வயிற்றில் அல்சர் பிரச்சனை, சிறுகுடல் பாதிப்பு உள்ளவர்கள் இஞ்சி டீயை அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் அது பெரிய  பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
 
அன்றாடம் அதிகமாய் இஞ்சி டீ குடித்தால், நாக்கில் அரிப்பு, எரிச்சல், வாய்ப்புண், வயிறு எரிச்சல் ஆகியவை ஏற்படும்.
 
இஞ்சியை அதிகமாக குடிப்பதால், அது அமிலத் தன்மையை அதிகரிக்கச் செய்து, நெஞ்செரிச்சல், வயிற்று வலி பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
 
இஞ்சி டீ ரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மைக் கொண்டது. எனவே குறைவான ரத்த அழுத்தம் மற்றும் ரத்தப்போக்கு பிரச்சனை உள்ளவர்கள் இஞ்சி டீ குடிப்பதை தவிர்ப்பது நல்லது.
 
பலவீனமான கர்ப்பிணிகள் மற்றும் அறுவை சிகிச்சை செய்தவர்கள் இஞ்சி டீயை அதிகமாக எடுத்துக் கொண்டால், அது உதிரப்போக்கை  அதிகப்படுத்திவிடும்.
 
நோய்களால் பாதிக்கப்பட்டு, அதற்கு மருந்துகளை சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இஞ்சி டீயை குடிக்கக் கூடாது. ஏனெனில் அது மருந்துக்களுடன் வினைபுரிந்து பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
 
இஞ்சியில் சாலிசிலேட் என்ற பொருள் உள்ளது. அவை ரத்தத்தின் அடர்த்தியை குறைக்கச் செய்யும். ரத்தப் போக்கு சம்பந்தப்பட்ட வியாதி உள்ளவர்கள் இஞ்சி டீயினை தவிர்க்கவேண்டும்.
 
கர்ப்பிணிகளும் இஞ்சி டீயை எடுத்துக் கொள்ளக் கூடாது. இவை கர்ப்பப்பையை இறுகச் செய்யும். அதேபோல் மிக பலமீனமான கர்ப்பிணிகளும் இஞ்சியை அதிகம் எடுத்துக் கொள்ளக் கூடாது. இது உதிரப்போக்கிற்கு காரணமாகிவிடும். அறுவை சிகிச்சை ஆனவர்களும்  இஞ்சி டீயை எடுத்துக் கொள்வது நல்லதல்ல.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மருத்துவகுணம் கொண்ட முசுமுசுக்கை இலையின் நன்மைகள்...!