Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

படித்தால் கண்ணீர் வரும்: 6 பேரால் பலாத்காரம், 36 மணி நேரம் ஆடையின்றி உயிருக்கு போராட்டம்!

படித்தால் கண்ணீர் வரும்: 6 பேரால் பலாத்காரம், 36 மணி நேரம் ஆடையின்றி உயிருக்கு போராட்டம்!
, வெள்ளி, 15 டிசம்பர் 2017 (13:54 IST)
பெங்களூரில் ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்த பெண்ணை ஆறு ஆண்கள் கடத்தி மிகவும் கொடூரமாக தாக்கி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது.
 
சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நில நடுக்கம் ஒன்றில் அந்த பெண்ணின் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் இறந்துள்ளனர். வீட்டின் கட்டிடம் இடிந்து விழுந்ததால் இந்த மரணம் நடந்துள்ளது. இதனால் அந்த பெண் தனியாக ஹோட்டல் ஒன்றில் 50 ரூபாய் சம்பளத்தில் பாத்திரம் கழுவும் வேலை பார்த்து வந்துள்ளார்.
 
இந்த பெண் தனியாக இருப்பதை தினமும் கவனித்த சிலர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். ஒரு வாரத்திற்கு முன்னர் அந்த பெண் வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டு இருக்கும் போது அடையாளம் தெரியாத 6 பேர் அந்த பெண்ணை அடித்து காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர்.
 
அந்த பெண்ணின் கால்களை கல்லால் அடித்து உடைத்தும், கைகளை திருகியும் உடைத்துள்ளனர். அதன் பின்னர் இரவு முழுவதும் அந்த ஆறு நபர்களும் அந்த பெண்ணை மிகவும் கொடூரமாக மிருகத்தனத்துடன் பாலியல் பலாத்காரம் செய்தனர். உயிருக்கு போராடிய அந்த பெண் இரவு முழுவதும் அங்கேயே உடலில் துணியில்லாமல் கிடந்துள்ளார்.
 
இதனையடுத்து குப்பையில் தூக்கி வீசப்பட்டிருந்து துணியை உடலின் சில பகுதிகளை மறைத்துக்கொண்டு தரையில் ஊர்ந்து அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் வந்து படுத்து உயிருக்கு போராடியுள்ளார். 36 மணி நேரமாக அங்கேயே சாப்பாடு இன்றி உயிருக்கு போராடியுள்ளார். அந்த பெண்ணுக்கு யாரும் உதவ முன்வராத நிலையில் பாரிஜாதா ஜி.டி என்ற சமூக ஆர்வலர் அந்த பெண்ணை மீட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்துள்ளார்.
 
அதன் பின்னர் அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு தனக்கு நடந்த அத்தனையயும் போலீசாரிடம் வாக்குமூலமாக அளித்துள்ளார் அந்த பெண். இவருக்கு நிர்பயா உதவித்தொகை திட்டத்தின் மூலம் உதவி பெற்றுத்தரப்படும் என கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சசிகலா கணவர் நடராஜனுக்கு ஜாமீன் வழங்கியது சுப்ரீம் கோர்ட்