Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செயற்கைக் காலில் பணம் பதுக்கிய பிச்சைக்காரர் : திடுக்கிடும் சம்பவம்

செயற்கைக் காலில் பணம் பதுக்கிய பிச்சைக்காரர் : திடுக்கிடும் சம்பவம்
, புதன், 2 ஜனவரி 2019 (16:24 IST)
பெங்களூர் ரயில் நிலையத்தில் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஷெரீப் என்பவர் சில ஆண்டுகளாக பிச்சை எடுத்து வந்தார். நேற்று தான் வழக்கமாக பிச்சை எடுக்கும் அதே இடத்தில் சடலமாக இறந்து கிடந்தார். அதனால் அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் ஷெரீப் சடலத்தைக் கைப்பற்றினர். பின்னர் அதே அதே இடத்தில் இருந்த அவரது செயற்கைக் காலை எடுத்த போது அது கனமாக இருக்கவே உள்ளே சோதனை செய்தனர். 
 
அதில் 500 ரூபாய் நோட்டுகள், 200 ரூபாய் நோட்டுகள், 100 ரூபாய் நோட்டுகள் 50 ரூபாய் நோட்டுகள் ,10 ரூபாய் நோட்டுகள் இருப்பதை கண்டனர். அத்துடன் பல சில்லறை காசுகளும் இருந்தன.
 
இதனையடுத்து மொத்த பணத்தையும் போலீஸார் எண்ணிய போது அதில் ரூ. 96000 இருந்தது தெரியவந்தது. 
 
ஷெரீப்பின் தங்கை ஹைதராபாத்தில் இருப்பதை அறிந்த போலீஸார் அவருக்கு இதுகுறித்த தகவல் தெரிவித்தனர். 
 
மேலும் இயற்கைக்கு மாறான இறப்பாக போலீஸாரெ ஷெரிப்பின் மரணத்தை பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கியா ரே செட்டிங்கா...? முதல்வரிடம் அடி பணிந்த கருணாஸ்