Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நீதித்துறையில் அரசு தலையிடுகிறது - உச்ச நீதிமன்ற நீதிபதி பகீர் குற்றச்சாட்டு

நீதித்துறையில் அரசு தலையிடுகிறது - உச்ச நீதிமன்ற நீதிபதி பகீர் குற்றச்சாட்டு
, சனி, 31 மார்ச் 2018 (11:37 IST)
நீதித்துறையில் அரசு தலையிடுகிறது என உச்ச நீதிமன்றம் நீதிபதி செலமேஸ்வர் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எழுதியுள்ள கடிதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடுகள் சரியாக இல்லை, மூத்த நீதிபதிகளுக்கு உரிய வழக்குகள் ஒதுக்குவதில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பாரபட்சம் காட்டுகிறார் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செலமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி லோகூர் மற்றும் குரியன் ஜோசப் ஆகியோர் கடந்த ஜனவரி 12ம் தேதி செய்தியாளர்கள் முன்பு பரபரப்பு பேட்டியளித்தனர்.
 
இந்திய வரலாற்றிலேயே உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தியது இதுதான் முதல் முறை. இது நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அனைவரும் நம்பும் நீதித்துறையே சரியாக செயல்படவில்லை எனில் யாரை நம்புவது என்கிற கேள்வி சாதாரண மக்கள் மனதில் எழுந்தது. அதன்பின், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, அந்த 4 நீதிபதிகளையும் அழைத்து பேசி, உச்ச நீதிமன்ற செயல்பாடுகளில் மாற்றம் வரும் என உறுதி அளித்த பின்பே அந்த பிரச்சனை சரியானது.
webdunia

 
இந்நிலையில், உச்ச நீதிமன்ற விவகாரங்களில் மத்திய அரசு தலையிடுகிறது என நீதிபதி செலமேஸ்வர் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிற்கு எழுதியுள்ள கடிதம் மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
 
மத்திய அரசு நேரடியாக உயர் நீதிமன்ற நீதிபதிகளை தொடர்பு கொண்டு உத்தரவிடுவதாகவும், நீதித்துறையும் அரசும் இணைந்து செயல்படுவது ஜனநாயகத்துகு அடிக்கப்படும் சாவுமணி என அந்த கடிதத்தில் செலமேஸ்வர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இது தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகளுடன் தலைமை நீதிபதி விவாதிக்க வேண்டும் எனவர் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அம்பேத்கர் சிலை மீண்டும் உடைப்பு: உபியில் பரபரப்பு